ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பாதாம் கீர் செய்வது இவ்வளவு ஈஸியா?

பாதாம் கீர் செய்வது இவ்வளவு ஈஸியா?

கீர் : இந்தியா முழுவதுமே பெரும்பாலான விசேஷ நாட்களில், பண்டிகைங்களில், திருமணங்களில் கொண்டாட்டங்களில் தவறாமல் இடம்பெறும் இனிப்பு, கீர். இதில் அரிசி, பால், மற்றும் உலர் பழங்கள் பழங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். விருந்துக்குப் பிறகு பாயசம் அல்லது கீர் பரிமாறப்படும். நீங்கள் விரும்புவதைப் போல சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ கீரைப் சாப்பிடலாம்.

Badam Kheer | சுவையான பாதாம் கீர் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

குழந்தைகளுக்கு பாதாம் கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருட்கள் :

பாதாம் பருப்பு - 25

சர்க்கரை - 1/4 கிலோ

ஏலக்காய் தூள் - பாதாம் எஸ்சென்ஸ்

பால் - 1 லிட்டர்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

பாதாம் கீர்

செய்முறை:

முதலில் வெதுவெதுப்பான பாலில் குங்குமப் பூவை ஊற வைக்கவும். பின்னர் பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவிட்டு தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அதன் பிறகு பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். அது நன்றாக சுண்டியதும் சர்க்கரை சேர்க்கவும்.

மேலும் படிக்க... ரசமலாய் ஸ்வீட்... ஈஸியான ரெசிபி இதோ...

பிறகு பாதாம் விழுதை போட்டு 5 நிமிடம் அடி பிடிக்காமல் கிளறவும் பால் திக்காகும் போது ஏலக்காய் தூள், ஊறவைத்த குங்கும பூ சேர்த்து கிளறினால் பாதாம் கீர் ரெடி…

First published:

Tags: Sweet recipes