யூடியூப்பில் ட்ரெண்டான ரைஸ் சப்பாத்தியை இதற்கு முன்பு ட்ரை பண்ணி இருக்கீங்களா? ஒருவேளை இதுவரைக்கும் ட்ரை செய்யாதவர்கள் இன்று நிச்சயம் ட்ரை பண்ணி பாருங்கள். கோதுமையை வைத்து நார்மலா சுடும் சப்பாத்தியை விட இந்த ரைஸ் சப்பாத்தி பயங்கர சாஃப்டாக இருக்கும். அதற்கு காரணம், சாதம் சேர்ப்பது தான். வீட்டில் இரவு வடித்த சாதம் மீந்து போய்விட்டால் அதை என்ன செய்வது என்று குழம்பவே வேண்டாம். மார்னிக் பிரேக் ஃபாஸ்டுக்கு இனிமேல் இதுப்போல் சப்பாத்தி போட்டு விடுங்கள். சாதமும் வீண் ஆகாது உங்களுக்கு சாஃப்ட்டான சப்பாத்தியும் கிடைத்து விடும். குறிப்பாக குழந்தைகள் இதை விரும்பி சாப்பிட அதிக வாய்ப்புண்டு.
இப்போது இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த ரெசிபியை வழங்கி இருப்பவர் அபி. இவரின் பிரபல இந்தியன் ரெசிபீஸ் தமிழ்
யூடியூப் சேனலில், தான் அபி இந்த ரைஸ் சப்பாத்தியை செய்து காட்டியுள்ளார்.
தேவையான பொருட்கள்:
வடித்த சாதம்,கோதுமை மாவும், மைதா மாவு, எண்ணெய் உப்பு.
செய்முறை:
1. முதலில் 1/2 கப் வடித்த சாதத்தை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
2. பின்பு இதனுடன் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
3. கொஞ்சம்,
எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பக்குவத்திற்கு சாஃப்டாக பிசைய வேண்டும் .
4. இப்போது சப்பாத்தி மாவு ரெசியாகி விட்டது. இதை அப்படியே 5 நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
5. சிறிது நேரம் கழித்து சப்பாத்தி போல் தட்டி, தவாவில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சூப்பரான டேஸ்டியான் ரைஸ் சப்பாத்தி தயார்.
இதையும் படிங்க.. இவ்ளோ டேஸ்டியா சென்னா மசாலா செஞ்சா நோ சொல்ல வாய்ப்பே இல்லை!
இதில் மைதா மாவு சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் வெறும் கோதுமை மாவை வைத்து மட்டும் இந்த ரைஸ் சப்பாத்தியை சுட்டு எடுக்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.