முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி...?

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி...?

ரிப்பன் பக்கோடா

ரிப்பன் பக்கோடா

மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ் மொறு மொறு சுவையில் ரிப்பன் பக்கோடா தேநீர் அருந்தும் பழக்கம் உடையோருக்கு நல்ல நொறுக்கு தீனி.

  • Last Updated :

பக்கோடா என்றாலே பலருக்கும் விருப்பம். அதிலும் ரிப்பன் பக்கோடா மொறு மொறு சுவையில் சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த கொரோனா நேரத்தில் வீட்டியே சுற்றி சுற்றி வரும் குழந்தைகளுக்கு இதனை மிக எளிதாக வீட்டிலேயே  செய்துக்கொடுக்கலாம் வாங்க...

மேலும் படிக்க... பீர்க்கங்காய் தோல் துவையல் செய்வது எப்படி தெரியுமா?

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப்

கடலை மாவு – 1 /4 கப்

வெண்ணெய் (unsalted preferred) – 1 /4 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 /2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 -2 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப)

எள்ளு – 1 /2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க

மேலும் படிக்க...கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... உப்பு சீடை ரெசிபி...

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.

அரிசி மாவு, கடலை மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

இதனுடன் வெண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

இதனுடன் எள்ளு மற்றும் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

பின்னர் முறுக்கு அச்சில் உள்ள ரிப்பன் பக்கோடா அச்சைப் பயன்படுத்தி எண்ணெயில் பாத்திரம் பிடிக்கும் அளவுக்கு பிழிந்து விடவும். பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

சூடு ஆரிய பின்பு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

குறிப்பு:

நிறைய பக்கோடா செய்ய விரும்புபவர்கள், முதலில் மாவு மற்றும்  தூள்களை மட்டும் கலந்து வைத்துக் கொள்ளவும். பொரிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் சேர்த்து பிசைந்தால் போதுமானது.

பொரிப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே மாவை பிசைந்து வைத்தால் நிறம் மாறுவதுடன், அதன் மொறு மொறுப்பும் குறைந்து விடும்.

மேலும் படிக்க... விநாயகருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Food, Krishna Jayanthi