ரெஸ்டாரண்ட் சுவையில் 'சிக்கன் 555' : செய்வது எப்படி?

சிக்கன் 555

வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் திருப்தியாக சாப்பிடலாம்.

 • Share this:
  ரெஸ்டாரண்ட் உணவுகள் என்றாலே நாவில் எச்சில் ஊறும். அந்த சுவையில் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் டபுள் ட்ரீட்டாக சாப்பிடலாம். அந்த வகையில் ரெஸ்டாரண்ட் சுவையில் 555 சிக்கன் ஃபிரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  சிக்கன் - 250 கிராம்
  மிளகாய் தூள் - 1 tbsp
  மஞ்சள் பொடி - 1 tsp
  கரம் மசாலா - 1 tsp
  உப்பு - தேவையான அளவு
  அரிசி மாவு - 1 tsp
  ரவை - 1 tbsp
  எண்ணெய் - 2 tbsp
  கறிவேப்பிலை - சிறிதளவு  செய்முறை :

  சிக்கனை சின்ன சின்ன பீஸாக நறுக்கி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

  அதை ஒரு கிண்ணத்தில் போட்டு மிளகாய் தூள், கரம் மசாலா, அரிசி மாவு, மஞ்சள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.

  'கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட்' நாவூறும் சுவையில் செய்ய ரெசிபி இதோ..

  30 நிமிடங்கள் ஊறியதும் தோசைக் கல் வைத்து எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு பீஸாக அதன் மீது வைக்கவும்.

  அவை பொன்னிறமாகவும், மொறுமொறுவெனவும் வறுபட்டதும் எடுத்துவிட்டு மீதமுள்ள சிக்கனை வையுங்கள்.

  இப்படி செய்ததும் இறுதியாக கறிவேப்பிலையை எண்ணெயில் பொறிக்கச் செய்து வறுத்த கறியில் போடவும்.

  அவ்வளவுதான் மொறுமொறுவென 555 சிக்கன் தயார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: