முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க உதவும் மாவுச்சத்து உணவுகள் - ஆய்வில் வெளியான தகவல்

புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க உதவும் மாவுச்சத்து உணவுகள் - ஆய்வில் வெளியான தகவல்

மாவுச்சத்து உணவுகள்

மாவுச்சத்து உணவுகள்

இரைப்பை, பித்தநீர் பாதை, கணையம் மற்றும் சிறுகுடல் புற்றுநோய் போன்ற மேல் இரைப்பை குடல் புற்றுநோய்களில் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உணவுகளின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மரபணு ரீதியாக சில புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பவர்கள் தங்கள் டயட்டில் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் (resistant starch) உணவுகளை சேர்ப்பது, அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை பாதியாக குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இரைப்பை, பித்தநீர் பாதை, கணையம் மற்றும் சிறுகுடல் புற்றுநோய் போன்ற மேல் இரைப்பை குடல் புற்றுநோய்களில் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உணவுகளின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது. ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் என்பது நம் சிறுகுடலில் செரிக்காத ஒரு வகை கார்போஹைட்ரேட் ஆகும். ஆனால் நம் பெருங்குடலில் நொதித்து, நன்மை செய்யும் குடல் பாக்டீரியாவுக்கு உணவளிக்கிறது. மேலும் இந்த வகை மாவுச்சத்து பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது மற்றும் குறைவான கலோரிகளை கொண்டுள்ளது.

பட்டாணி, பீன்ஸ் மற்றும் ஓட்ஸில் இயற்கையாகவே ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் தினசரி 30 கிராம் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உணவுகளை பெற்றனர். மற்ற பாதி பேருக்கு இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு சிகிச்சை விளைவு இல்லாத மருந்து பவுடர் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் லிஞ்ச் சிண்ட்ரோம் எனப்படும் மரபணு நிலை கொண்ட கிட்டத்தட்ட 1,000 பேர் பங்கேற்றனர். இது ஒரு பரம்பரை புற்றுநோய் நோய்க்குறி, இது பெருங்குடல், எண்டோமெட்ரியல் மற்றும் குடல் புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஆய்வின் போது இரு குழுக்களில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட குடல் புற்றுநோயின் நிகழ்வுகளில் எந்த வித்தியாசமும் இல்லை என்றாலும், ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் எடுத்து கொண்ட குழுவில் குறைவான மக்களே புற்றுநோய் அறிகுறிகளை உருவாக்கினர். ஆய்வை பற்றி கருத்து தெரிவித்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஜான் மாதர்ஸ், ரெசிஸ்டென்ட் ஸ்டார்ச் நம் செரிமான அமைப்பில் நார்ச்சத்து போல செயல்படுகிறது.

நீங்கள் ப்ளாக் டீ குடிப்பவரா..? உங்களுக்கான குட் நியூஸ்...

பித்த அமிலங்களின் பாக்டீரியா வளர்சிதை மாற்றத்தை மாற்றுவதன் மூலமும், நமது டிஎன்ஏவை சேதப்படுத்தும் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் பித்த அமிலங்களின் வகைகளைக் குறைப்பதன் மூலமும் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். இருப்பினும் இதற்கு மேலும் ஆராய்ச்சி தேவை என்றார்.

புற்றுநோய்களை தடுக்க மற்றும் சிகிச்சையளிக்க உணவுமுறை மிக முக்கியமான காரணி. சில உணவுமுறைகள் புற்றுநோய்க்காக ஏற்கனவே கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அதிக ஆதரவு அளிக்கும் மற்றும் புற்றுநோய் செல்களை மிகவும் திறம்பட சமாளிக்க உதவும் என அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கதிரியக்க சிகிச்சையின் முன்னாள் பேராசிரியர் பிகே ஜுல்கா கூறினார்.

தற்போதைய ஆய்வின் முடிவு என்று வரும் போது, ​​பொது மக்களுக்கு இதை விரிவுபடுத்த முடியாது. ஏனெனில், லிஞ்ச் சிண்ட்ரோம் உள்ளவர்கள் மாவுச்சத்து குறைபாடுகளை விளைவிக்கக்கூடிய அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற நிலைமைகளுக்கு ஆளாகின்றனர். புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய 5 படிகளில் ஊட்டச்சத்து அல்லது உணவு சிகிச்சை முக்கியமான ஒன்று என்கிறார்.

இந்த மசாலாப் பொருட்களை உங்கள் காபியில் சேர்த்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...

புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க புற்றுநோய் மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர் டாக்டர் சித்தார்த்த முகர்ஜி கூறுகையில், புற்றுநோய் வளர்ச்சியை மெதுவாக்க உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளுடன் உணவுமுறைகளை இணைப்பது தனது ஆராய்ச்சிப் பகுதிகளில் ஒன்று என்றும் கூறினார்.

First published:

Tags: Cancer, Food