ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தசை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரதம் – ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு.!

தசை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரதம் – ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு.!

புரதம்

புரதம்

உடலிலேயே சில வகையான புரதங்கள் சுரக்கிறது என்பது பற்றி பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தசைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தானாகவே சரி செய்யக்கூடிய ஒரு புரதச்சத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களில் புரதச்சத்தும் ஒன்று. குறிப்பாக தசை ஆரோக்கியம் மற்றும் தசை வலிமையாக இருப்பது, எடை கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவற்றுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால், உடலிலேயே சில வகையான புரதங்கள் சுரக்கிறது என்பது பற்றி பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தசைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தானாகவே சரி செய்யக்கூடிய ஒரு புரதச்சத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தசைகள், தசை னார்கள், மற்றும் தசை செல்கள் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும், பாதிப்புகளை தானாகவே சரி செய்யும் இந்தப் புரதம் டோக்கியோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. பிளேட்லெட்டில் இருந்து பெறப்படும் வளர்ச்சி காரணியான B (PDGF-B) என அடையாளம் காணப்பட்ட இந்த புரதம், எலும்பு தசை செல்களில் இருந்து தொடர்ந்து வெளியிடப்படுகிறது. மேலும், இந்த ஆய்வில் கூறியுள்ளது படி, இந்த புரதம் வெளியிடப்படும் போது, மயோபிளாஸ்ட்கள் அல்லது தசை ஸ்டெம் செல்கள் உருவாவதையும் ஊக்குவிக்கும். PDGF-B தசை நார்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு, மருத்துவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும், தசைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு, காயங்களுக்கு சிறந்த தீர்வாகும் என்றும், இது தசை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் புரட்சியை உண்டாக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்த புரதத்தின் பெயர் மயோகின்ஸ் : 

மயோகின்ஸ் என்று கூறப்படும் இந்த சிறிய அளவிலான புரதங்கள் தசைகளின் செல்களிலேயே உற்பத்தியாகி பல விதமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. எப்படி மயோகின்ஸ் செயல்படுகிறது என்பதை பற்றி முழு விவரங்கள் சரியாக தெரியவில்லை என்றாலும், இது தசைநார்கள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. மேலும், எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல், எலும்பு தசைகளில் இந்த மயோகின் புரதம் சுரக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மயோகின்ஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள, ஆய்வாளர்கள் முதலில் மையோபிளாஸ்ட்டுகளை PDGF-Bக்கு வெளிப்படுத்தினர். அதன் பின்னர், இந்த புரதம் மிகவும் வேகமாக, மையோபிளாஸ்டுகள் உற்பத்தி செய்வதைக் கண்டறிந்தனர். மேலும், வளர்ச்சி நிலையில் இருக்கும் செல்களையும் இந்த புரதம் பாதிக்கிறது என்பதையும் ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.

கூடுதல் ஆய்வுகளில், இந்த புரதம் தசை நார்களை உற்பத்தி செய்வதில் உதவுவதோடு மட்டுமல்லாமல், அதனை வலிமையாக்குவதிலும் செயல்படுகிறது என்பது பதிவு செய்யப்பட்டது.

Also Read : Protein Deficiency : உடலில் புரதச்சத்து குறைந்துவிட்டால் என்னென்ன அறிகுறிகள் தெரியும்..? கவனமாக இருங்கள்..!

PDGF-B, இறுதி முடிவில், மையோடியூப்ஸ் மற்றும் மையோபிளாஸ்ட்டுகள் இடையே உள்ள மிக மிக குறைவான வேறுபாடுகளை குறிப்பிட்டது. இந்த வேறுபாடுகள், விரைவான செல்கள் வளர்ச்சிக்கும், அவை முதிர்வு அடைவதற்கும் உதவும் என்பதை ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

First published:

Tags: Protein, Protein Deficiency, Protein Rich Food