ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் வரும் ஆபத்துகள்..!

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் வரும் ஆபத்துகள்..!

 சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெய்

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மீண்டும் சூடேற்றி பயன்படுத்தும் போது, அதில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறுவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியர்களின் உணவு என்பது மிகவும் சுவை மிகுந்தது மற்றும் நாவில் எச்சில் ஊற வைக்கக் கூடியது. எந்த ஒரு விழாக் காலமும் தேவையில்லை. சாதாரண நாட்களில் கூட நாம் நல்ல விருந்து உணவை தான் சமைத்து சாப்பிடுகிறோம். குறிப்பாக, எண்ணெய்யில் பொறித்து எடுக்கப்பட்ட அசைவ உணவு வகைகள் அல்லது காலி ஃபிளவர், உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்ற சைவ உணவு வகைகளை நாம் அதிகம் விரும்பி உண்ணுகிறோம்.

அதே சமயம், ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் சூடேற்றி பயன்படுத்த முடியுமா என்பது குறித்து நீங்கள் சிந்தித்தது உண்டா? ஆம், பயன்படுத்திய சமையில் எண்ணெய்யில் மீண்டும் ஏதாவது ஒரு உணவுப் பொருளை பொறித்து எடுப்பது இந்திய சமையல் அறைகளில் பொதுவான விஷயமாக இருக்கிறது.

பழைய எண்ணெயை பயன்படுத்துவதால் ஏராளமான பணம் மிச்சம் செய்யப்படுகிறது என்பதாலே நிறைய மக்கள் இதை கடைப்பிடிக்கின்றனர். ஆனால், நம் உடலில் பல நோய்கள் உண்டாகுவதற்கு, இந்த பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யும் ஒரு காரணம் ஆகும்.

நச்சுத்தன்மை கொண்டது :

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மீண்டும் சூடேற்றி பயன்படுத்தும் போது, அதில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறுவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவிக்கிறது. இது உங்களுக்கு பல விதமான அழற்சிகளையும், நீண்ட கால நோய்களையும் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.

பொதுமக்கள், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகள் தெரிவிக்கின்றன. தவிர்க்க முடியாத சூழலில், எண்ணெய்யை 3 முறை சூடேற்றி பயன்படுத்தலாம் என்றும், அதற்கு மேல் பயன்படுத்தினால் டிரான்ஸ் ஃபேட் என்னும் கெட்ட கொழுப்பு சேரும் என்றும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

எண்ணெய்யை சூடேற்றி பயன்படுத்துவதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும் என்பதை, இந்த செய்தியில் பார்க்கலாம்.

சமையல் எரிவாயு நீண்ட நாட்களுக்கு வர வேண்டுமா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது :

மீண்டும், மீண்டும் பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் உடலில் கொஞ்சம், கொஞ்சமாக லிபிட் டெப்பாஷிசன், ஹைப்பர்டென்ஷன் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.

அசிடிட்டி மற்றும் செரிமானக் கோளாறு ஏற்படும் :

நம் உடலில் அசிடிட்டி அதிகரிக்க, பயன்படுத்தப்பட்ட எண்ணெய் காரணமாக அமைகிறது. இது வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. தொண்டை வலி மற்றும் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால், அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் சாலையோர கடைகளில் துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு அளவு அதிகரிக்கும்

உடலில் டிரான்ஸ் ஃபேட் அதிகரிப்பதற்கு இது காரணமாக அமைகிறது. எண்ணெய்யில் இயற்கையாக இருக்கக் கூடிய நல்ல கொழுப்புகள் என்பது, நீங்கள் அதிகமாக சூடேற்றும் போது கெட்ட கொழுப்புகளாக மாறிவிடும் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும் :

பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சூடேற்றி உணவு சமைப்பதை நீண்டகால வாடிக்கையாக நீங்கள் பின்பற்றினால், புற்றுநோய் உண்டாகுவதற்கான அபாயம் அதிகரிக்கும்.

First published:

Tags: Cooking Oil, Cooking tips