Home /News /lifestyle /

உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் ஆன்டிநியூட்ரியன்கள் : எப்படி தவிர்ப்பது..?

உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் ஆன்டிநியூட்ரியன்கள் : எப்படி தவிர்ப்பது..?

உணவு ஆரோக்கியம்

உணவு ஆரோக்கியம்

நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், சில நேரங்களில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும். இந்த வரிசையில் தான் தாவர அடிப்படையிலான உணவுகளை சரியான முறையில் உட்கொள்ளாத போது செரிமான பிரச்சனை, நீரழிவு நோய், இதய நோய் போன்ற பல உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நாம் சாப்பிடும் பெரும்பாலான தாவர உணவுகளில், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சம் தன்மை கொண்டுள்ள ஆன்டி-நியூட்ரியன்கள் அதிகளவில் இருந்தாலும், சரியான முறையில் உட்கொள்ளும் போது உடலுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், சில நேரங்களில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும். இந்த வரிசையில் தான் தாவர அடிப்படையிலான உணவுகளை சரியான முறையில் உட்கொள்ளாத போது செரிமான பிரச்சனை, நீரழிவு நோய், இதய நோய் போன்ற பல உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். பொதுவாக ஆன்டிநியூட்ரியன்கள் உடலில் செரிமானம் மற்றும் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உறிஞ்சுதலைக் குறைக்கிறது . இருந்தாலும் இதனை சரியான முறையில் உட்கொள்ளும் போது உடல் நலத்தைப் பாதுகாக்கலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

முதலில் தாவர அடிப்படையிலான உணவு என்ன என்பது குறித்து அறிந்துக் கொள்வோம். தாவர அடிப்படையிலான உணவு, தாவர மூலங்களிலிருந்து பெறப்படும் பழங்கள், காய்கறிகள், நட்ஸ், எண்ணெய்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை தாவர அடிப்படையிலான அதாவது Plant based உணவுகள் என்றழைக்கப்படுகிறது. குறிப்பாக அனைத்து உணவுகளிலும் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், தானியங்கள், விதைகள், நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளை நாம் சாப்பிடும் போது பாதுகாப்போடு சாப்பிடும் போது நோய்த் தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கபூர். ஏன்? எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.



உணவுகளை ஆன்டிநியூட்ரின்களைக் குறைப்பது எப்படி?

ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் இருந்தாலும் சில உணவுகளில் ஆன்ட்டிநியூட்ரின்கள் இருப்பதால், உணவு பொருள்களை ஊறவைத்தல், முளைகட்டுதல், நொதித்தல் போன்றவற்றின் மூலம் குறைக்க முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் டாப் 7 உணவுகள்

ஊறவைத்தல்:

நாம் சாப்பிடும் பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் விதைகளை ஊறவைத்துத் தான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் இந்த உணவுகளில் உள்ள பெரும்பாலான ஆன்டிநியூட்ரியன்கள் தோலில் காணப்படுகின்றன. பருப்பு வகைகளில் ஊறவைக்கும் போது புரோட்டீஸ் தடுப்பான்கள், லெக்டின்கள், டானின்கள் மற்றும் கால்சியம் ஆக்சலேட் ஆகியவற்றின் அளவை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதோடு ஆன்டிநியூட்ரியன்களின் அளவை 50 சதவீதம் வரை குறைக்கலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.



முளைக்கட்டுதல்:

உணவுப்பொருள்களை அப்படியே சாப்பிடுவதற்குப் பதிலாக முளைக்கட்டி சாப்பிடும்போது உடலுக்கு ஆற்றல் அதிகளவில் கிடைக்கிறது. குறிப்பாக பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் சில தானியங்களை பாத்திரத்தில் வைத்துக் கொண்டு சூரிய ஒளியில் 8-12 மணி நேரம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் சாப்பிடும் போது இந்த உணவுகள் 81 சதவீதம் வரை ஆன்டிநியூட்ரியன்களின் அளவை குறைக்கலாம்.

கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்!

நொதித்தல்:

பழங்கால உணவுமுறைகளைப் பாதுகாப்பதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் முறை தான் நொதித்தல். நாம் சாப்பிடும் பல்வேறு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் நொதித்தல் பைடேட்டுகள் மற்றும் லெக்டின்களை திறம்பட குறைக்கிறது.

எனவே தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகளவில் உட்கொள்ளும் போது மேற்கண்ட முறைகளை பின்பற்றினால் உடலுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food, Nutrition food

அடுத்த செய்தி