ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கீரை வடை செய்ய தெரியுமா..? உங்களுக்கான ரெசிபி..

கீரை வடை செய்ய தெரியுமா..? உங்களுக்கான ரெசிபி..

கீரை வடை

கீரை வடை

மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று முருங்கை கீரை சேர்த்து மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கீரை - 1 கட்டு

உளுந்து - 200 கிராம்

கடலை பருப்பு - 50 கிராம்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 1 துண்டு

சீரகம் - 1 1/2 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

1. முதலில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள்.

2. அதனை தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். மாவு கையில் ஒட்டக் கூடாது.

3. கீரையை நன்றாக சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

4. பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

5. அரைத்த மாவில் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, இஞ்சி, கீரை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

Also see... இந்த ராசியினருக்கு இன்று சமூகத்தில் மதிப்பும்,

6. பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை எலுமிச்சை அளவு மாவு எடுத்து ஓட்டவடை அளவுக்கு வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போட வேண்டும். பின் லாவகமாக எண்ணெயில் உடையாமல் போட்டு எடுக்க வேண்டும். .

7. பின்னர் பொன்னிறமாக பொரிந்ததும் வெளியே எடுத்துவிடுங்கள். அவ்வளவுதான் கீரை வடை தயார்.

8. இந்த வடைக்கு அரை கீரை, சிறு கீரை, பசலை கீரை, முருங்கைக்கீரை என எந்த கீரையும் போடலாம். எதுவாக இருந்தாலும் பொடியாக நறுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆ

First published:

Tags: Evening Snacks