முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இட்லி மாவு மீந்து விட்டதா? சுவையான கேக் செய்யலாம்..! - கொஞ்சம் முயற்சித்து பாருங்கள்!

இட்லி மாவு மீந்து விட்டதா? சுவையான கேக் செய்யலாம்..! - கொஞ்சம் முயற்சித்து பாருங்கள்!

கேக்

கேக்

எங்க வீட்டு மாவில் இட்லியே சாஃப்டாக வராது, இதில் கேக் எப்படி செய்வது என்று உங்களுக்கு நினைக்கத் தோன்றலாம்! இருப்பினும், பின்வரும் செய்முறையை பின்பற்றி முயற்சி செய்து பாருங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈஸியான ரெசிபி இதோ.!கேக் என்றதுமே சட்டென்று பேக்கரியில் வாங்கி உண்ணும் உணவுப் பொருள் என்றுதான் நம் நினைவுக்கு வரும். வீட்டில் நாமே கேக் செய்ய முடியும் என்றாலும், அது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல என்பதால் நாம்  செய்வதில்லை. கேக் தயாரிப்பிற்கான மூலப் பொருள் மற்றும் செய்முறைகளில் ஏதேனும் கூட, குறைய இருந்தால் கேக் சாஃப்டாக வராது.

பொதுவாக மாவு, வெண்ணெய், முட்டை, பால், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் போன்றவை சேர்க்கப்பட்டு கேக் செய்யப்படுகிறது. இந்த பொருள்கள் அனைத்தும் அதற்குரிய அளவில் சேர்க்கப்பட்டால் மட்டுமே கேக் சாஃப்டாக வரும். சிலர் கூடுதலாக கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இட்லி மாவு அல்லது தோசை மாவு கொண்டு கேக் செய்ய முடியும் என்பதுதான். எங்க வீட்டு மாவில் இட்லியே சாஃப்டாக வராது, இதில் கேக் எப்படி செய்வது என்று  நினைக்கத் தோன்றலாம்! இருப்பினும், பின்வரும் செய்முறையை பின்பற்றி முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள் : 

1 கப் - இட்லி மாவு,

¾ கப் - சர்க்கரை,

2 டேபிள் ஸ்பூன் - ரவா,

½ கப் அளவு - தேங்காய் துருவல்,

1 டீஸ்பூன் - நெய்,

½ டீஸ்பூன் - ஏலக்காய் பவுடர்,

¼ டீஸ்பூன் - சோடா ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை : 

ஒரு சில்வர் பாத்திரத்தை மூடியுடன் எடுத்துக் கொள்ளவும் அல்லது பிரஷர் குக்கர் பயன்படுத்தலாம். இதை வெறுமனே 5 நிமிடத்திற்கு சூடேற்றவும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, சர்க்கரை ஆகியவற்றை நன்றாக கலக்கவும். இதனுடன் ரவை, தேங்காய் துருவல், நெய் மற்றும் ஏலக்காய் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இறுதியாக பேக்கிங் சோடா சேர்த்து கலக்கி வைக்கவும்.
இப்போது ஒரு கடாயில் நெய் தடவி, அதன் மீது பேக்கிங் பேப்பர் படர வைக்கவும். நெய் தடவிய கடாய் மீது இட்லி கலவை மாவை ஊற்றவும். ஏற்கனவே சூடாக்கிய பாத்திரத்தின் உள்ளே இதை வைக்கவும். அதை மூடி வைப்பதுடன், ஏதேதும் இடைவெளி தென்பட்டால், அவற்றையும் அடைக்கவும்.
ஒரு 30 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கேக் உருவாகுமாறு வேக வைக்கவும். அடி பிடிப்பதை தடுக்க 10 நிமிடங்களுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ளவும். கொஞ்சம் கேக் வெந்த பிறகு, ஒரு ஈரமான சிறு குச்சியை அதன் மீது குத்திப் பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டினால் இன்னும் வேகவில்லை என்று அர்த்தம். மாவு ஒட்டவில்லை என்றால், நீங்கள் சாப்பிடுவதற்கான சுவையான கேக் தயார் ஆகிவிட்டது.
First published:

Tags: Cake, Idli dosa batter