பச்சை கொத்தமல்லியில் சட்னி செஞ்சு சாப்பிட்டுருப்பீங்கள் ... ஆனால் வர கொத்தமல்லி சட்னி?... இந்த பதிவில் வர கொத்தமல்லி சட்னி எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...
மல்லி விதையிலும் சட்னி செய்யலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த சட்னியை அரைத்து வைத்துக் கொண்டால் 2 நாட்கள் வரை கூட கெட்டுப்போகாது. ட்ராவலுக்கு கொண்டுபோக வசதியான சட்னியும் கூட இது. ஆரோக்கியம் தரக்கூடிய வரகொத்தமல்லி சட்னியை சுலபமாக சுவையாக அரைப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...
தேவையான பொருள்கள்
தேங்காய் துருவல் - 1/2 கப்
முழு கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் வத்தல் - 2
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
தனியா : வயிற்றில் அதிக உஷ்ணத்தால் அல்லது அமில வீச்சால் அவதிப்படுபவர்களுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது தனியா. இது வீக்கம், வாய்வு , பசியை அதிகரிக்க மற்றும் வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் உதவுகிறது.
செய்முறை
1. அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முழு கொத்தமல்லி, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு நன்கு வறுக்கவும்.
2. பிறகு அதனுடன் மிளகாய் வத்தல், புளி, தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
3. நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களோடு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும். சுவையான வரமல்லி சட்னி ரெடி. இட்லி. தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.