ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கேரட் சாதம் 10 நிமிடத்தில் ருசியாக செய்ய ரெசிபி...

கேரட் சாதம் 10 நிமிடத்தில் ருசியாக செய்ய ரெசிபி...

கேரட் சாதம்

கேரட் சாதம்

கேரட் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை செய்கிறது. அத்தகைய இந்த கேரட்டில் கலர் ஃபுல்லாக சாதம் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கேரட் சாதம் காலை வேளையில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கோ அல்லது அலுவலகத்திற்கு செல்லும் போதோ, விரைவில் சமைப்பதற்கு ஏற்ற சிறந்த உணவாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

சாதம் – 2 கப்

கேரட் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

பிரியாணி இலை – 1

கிராம்பு – 3

பட்டை – 1 இன்ச்

ஏலக்காய் – 1

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

மல்லி தூள் – 1 டீஸ்பூன்

முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

Also see... அதிக புரதம்.. டேஸ்டா செய்யலாம் மட்டன் ரத்த பொரியல்.. 10 நிமிடத்தில் செய்திட ரெசிபி!

செய்முறை

1. முதலில் கேரட்டை எடுத்து அதன் தோலை நீக்கி துருவிக்கொள்ளவும்.
2. பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
3.  ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
4. பின்னர் அதே எண்ணெயில் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய, பின்பு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
5. பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து, 7-8 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கவும்.
6. பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
7. தொடர்ந்து சாதத்தை போட்டு, 3 நிமிடம் கிளறி அடுப்பில் இருந்து  இறக்க வேண்டும். அவற்றின் மேலே முந்திரியை தூவினால் சுவையான கேரட் சாதம் தயார்.
First published:

Tags: Carrot Recipes, Lunch