• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தேங்காய் இல்லாமல் வெள்ளை சட்னி அரைக்கலாம் : எப்படி தெரியுமா..?

தேங்காய் இல்லாமல் வெள்ளை சட்னி அரைக்கலாம் : எப்படி தெரியுமா..?

தேங்காய் இல்லாமல் வெள்ளை சட்னி

தேங்காய் இல்லாமல் வெள்ளை சட்னி

தேங்காயே இல்லாமல் வெள்ளை சட்னி அரைக்கலாம். இந்த சட்னியில் தேங்காய்க்கு பதில் வெங்காயம் சேர்க்கப்படுவதுதான் இதன் ஸ்பெஷல்.

  • Share this:
எப்போதும் தேங்காய் சேர்த்து வெள்ளை சட்னி அரைத்துப் பழகிய உங்களுக்கு இது ஆச்சரியமாக உள்ளதா..? ஆம், தேங்காயே இல்லாமல் வெள்ளை சட்னி அரைக்கலாம். இந்த சட்னியில் தேங்காய்க்கு பதில் வெங்காயம் சேர்க்கப்படுவதுதான் இதன் ஸ்பெஷல். சரி எப்படி ஆரைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 2
பொட்டுக்கடலை – 50 கிராம்
புளி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
பூண்டு - 3
உப்பு - தே.அ

தாளிக்க

எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 சிட்டிகை
கருவேப்பிலை - சிறிதளவு



செய்முறை :

பாத்திரம் வைத்து பொட்டுக்கடலையை தவிர மற்ற அனைத்தையும் மிதமான தீயில் வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

அதை சூடு போக ஆற வைத்து பின் மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதனுடன் பொட்டுக்கடலை மற்றும் உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

இப்படி கூட அடை தோசை மாவு அரைக்கலாமா..? மொறு மொறுனு வர இதுதான் காரணமா..?

அதை இப்போது ஒரு கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை சேர்த்து தாளித்து அதில் கொட்டவும்.

அவ்வளவுதான் சட்னி தயார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: