முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தர்பூசணியை அப்படியே சாப்பிடுவதை விட இப்படி சாலட் செய்து சாப்பிடுங்கள்... இதை விட பெஸ்ட் இருக்காது..!

தர்பூசணியை அப்படியே சாப்பிடுவதை விட இப்படி சாலட் செய்து சாப்பிடுங்கள்... இதை விட பெஸ்ட் இருக்காது..!

தர்பூசணி

தர்பூசணி

இதை தினசரி உட்கொள்வது மிகவும் நல்லது. இதனால் கோடைக்கால உபாதைகளையும் தவிர்க்க முடியும்.

  • Last Updated :

கோடையில் உடலின் நீர்ச்சத்து தாகத்தை தீர்ப்பது தர்பூசணிதான். எனவே இதை தினசரி உட்கொள்வது மிகவும் நல்லது. இதனால் கோடைக்கால உபாதைகளையும் தவிர்க்க முடியும். அப்படி தினசரி சாப்பிடும் போது ஒரு நாள் மாற்றத்திற்காக இப்படி சாலட் செய்து சாப்பிட்டு பாருங்கள். தினசரி ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடித்தால் இது புது சுவையை தரும். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தர்பூசணி - 2 ஸ்லைஸ்

வெள்ளரிக்காய் - 1

புதினா - சிறிதளவு

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

உப்பு - தே.அ

மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

செய்முறை :

தர்பூசணி , வெள்ளரிக்காய் மற்றும் புதினாவை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

மாம்பழ சீசன் வந்துடுச்சு... சுவையான மாம்பழ கேக் செய்ய இதுதான் சரியான நேரம்.. ரெசிபி இதோ..!

அவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு அதன் மேல் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் தூவி கிளறிவிடுங்கள்.

அவ்வளவுதான் சாலட் சாப்பிட தயார்.

top videos

    இதை காலை உணவாகவும் உட்கொள்ளலாம்.

    First published:

    Tags: Salad Recipes, Watermelon