சாண்ட்விச் என்றாலே குழந்தைகள் குஷியாகிவிடுவார்கள். அதுவும் காலை பிரேக் ஃபாஸ்ட் சாண்ட்விச் என்றால் இட்லி தோசையிலிருந்து விடுதலை என மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். இதனால் உங்களுக்கும் சிரமமின்றி வேலை எளிதாக முடிந்துவிடும். அந்த வகையில் 5 நிமிடத்தில் செய்யக் கூடிய வெஜ் சாண்ட்விச் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சட்னி அரைக்க :
புதினா , கொத்தமல்லி - 1 கப்
எலுமிச்சை - பாதி
உப்பு - தே.அ
சர்க்கரை - 1/2 tsp
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
வேர்க்கடலை - 1 tsp
மசாலா ஸ்டஃப் வைக்க
வெங்காயம் - 1/2 கப்
கேரட் - 1/2 கப்
வெள்ளரிக்காய் - 1/2 கப்
தக்காளி - 1/2 கப்
முட்டைகோஸ் - 1 கப்
மயோனைஸ் - 1/2 கப்
உப்பு - தே.அ
கொத்தமல்லி - சிறிதளவு
பிரெட் - 2
வெண்ணெய் - தே.அ
செய்முறை :
சட்னி அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஜாரில் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். சட்னி கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
பின் மசாலா ஸ்டஃபில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு கிண்ணத்தில் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
சற்று கெட்டியாக இருந்தால் கூடுதலாக மயோனைஸ் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளலாம். ஸ்டஃப் கெட்டியான பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மாம்பழ சீசன் வந்துடுச்சு... சுவையான மாம்பழ கேக் செய்ய இதுதான் சரியான நேரம்.. ரெசிபி இதோ..!
இப்போது சாண்ட்விச் செய்ய பிரெட்டில் வெண்ணெய் தடவிக்கொள்ளுங்கள். பின் அதன் மேல் சட்னி தடவிக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு ஸ்பூன் ஸ்டஃப் வைத்து சம அளவில் பரவி விடுங்கள்.
அதன் மேல் வைக்கக் கூடிய மற்றொரு பிரெட்டிலும் வெண்ணெய் மற்றும் சட்னி தடவி அதன் மேல் மூடிவிடுங்கள்.
இதை சாண்ட்விச் மேக்கர் இருந்தால் அதில் வைத்து எடுத்தால் சாண்ட்விச் தயார்.
பேனில் செய்வதாக இருந்தால் வெண்ணெய் தடவி காய்ந்ததும் மிதமான சூட்டில் பிரெட்டை வைத்து சூடேற்றுங்கள்.
இரண்டு புறமும் பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடுங்கள்.
இறுதியாக அதை இரண்டு துண்டுகளாக நறுக்கி பரிமாறுங்கள். அவ்வளவுதான் வெஜ் சாண்ட்விச் தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.