ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வாழைக்காயில் வடை செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி..!

வாழைக்காயில் வடை செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி..!

வாழைக்காயில் வடை

வாழைக்காயில் வடை

இந்த ரெசிபியை ஒரு முறை டிரை பண்ணுங்க... பிறகு வாழைக்காயை பார்த்தாலே வடை செய்யதான் தோன்றும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாழைக்காயில் பெரும்பாலும் வறுவல் அல்லது பொறியல்தான் செய்வதுண்டு. சில நேரங்களில் பஜ்ஜிகூட போடுவோம். ஆனால் அதில் வடை செய்ய நினைத்ததுண்டா..? இந்த ரெசிபியை ஒரு முறை டிரை பண்ணுங்க... பிறகு வாழைக்காயை பார்த்தாலே வடை செய்யதான் தோன்றும்.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 3

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 1 துண்டு

கறிவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - 1 1/2 tsp

மஞ்சள் தூள் - 1/4 tsp

மிளகாய் தூள் - 1 tsp

பெருங்காயத்தூள் - 1 tsp

அரிசி மாவு - 2 tbsp

கடலை மாவு - 2 tbsp

கரம் மசாலா தூள் - 1/2 tsp

எண்ணெய் - தே.அ

செய்முறை :

வாழைக்காயை தண்ணீரில் கொதிக்க வைத்து வேக வைத்துக்கொள்ளுங்கள். குக்கரி போடுவதாக இருந்தால் 1 விசில் போதும்.

வாழைக்காய் வெந்ததும் அதை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.

Also Read : தோசை மீந்துருச்சா..? கவலை வேண்டாம்.. 5 நிமிடத்தில் கொத்து தோசை ரெசிபி.!

பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து வடை சுடுவதற்கு ஏற்ற பதத்தில் பிசைந்துகொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வையுங்கள். பின் கொஞ்சமாக எடுத்து வடை தட்டுவதுபோல் தட்டி எண்ணெயில் போடுங்கள்.

பின் பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். அவ்வளவுதான் வாழைக்காய் வடை தயார்.

First published:

Tags: Banana, Evening Snacks, Food recipes