தக்காளியில் உள்ள பொட்டாசியம் , இரும்புச் சத்து , விட்டமின் C , K , நார்சத்து என எண்ணற்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. இதனால்தான் தக்களியை இந்திய சமையலில் கட்டாய உணவாக உட்கொள்கிறோம். தக்காளியில் ஊறுகாய் செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா ?
தேவையான பொருட்கள்
தக்காளி - 4
எண்ணெய் - 2 tsp
புளி தண்ணீர் - அரை கப்
மிளகாய் தூள் - 5 tsp
மஞ்சள் - 1/2 tsp
வெந்தையத் தூள் - 1 tsp
கள் உப்பு - 3 tsp
தாளிக்க
எண்ணெய் - 3/4 tsp
காய்ந்த மிளகாய் - 5
கடுகு - 1 tsp
பூண்டு - 10
செய்முறை :
தக்களியை நறுக்கி மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அதோடு புளித் தண்ணீர் சேர்க்கவும். அடுத்ததாக மிளகாய்த் தூள், மஞ்சள், வெந்தையத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு எண்ணெய் பிரிந்து வருமாறு வதக்கவும்.
தாளிக்க மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி ஊறுகாயில் கொட்டவும்.
சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.