Home /News /lifestyle /

வாழைப்பழ ஓமப்பொடி ரெசிபி... குழந்தைகளுக்கும் பிடித்த வகையில் இனிப்பாக இருக்கும்..!

வாழைப்பழ ஓமப்பொடி ரெசிபி... குழந்தைகளுக்கும் பிடித்த வகையில் இனிப்பாக இருக்கும்..!

வாழைப்பழ ஓமப்பொடி

வாழைப்பழ ஓமப்பொடி

சிலருக்கு இனிப்பு வகை அதிகம் பிடிக்குமெனில் இந்த ஓமப்பொடியை இனிப்பு சுவையில் செய்தும் சாப்பிடலாம். அதுவும் வாழைப்பழ ஃபிளேவரில் மொறுமொறுவென ருசியாக இருக்கும்.

சாட் வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஓமப்பொடியை சிலர் சும்மாவே விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். சிலருக்கு இனிப்பு வகை அதிகம் பிடிக்குமெனில் இந்த ஓமப்பொடியை இனிப்பு சுவையில் செய்தும் சாப்பிடலாம். அதுவும் வாழைப்பழ ஃபிளேவரில் மொறுமொறுவென ருசியாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சை வாழைப்பழம் - 6
கருப்பு மிளகு - 4
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 4 டீஸ்பூன்
கடலை மாவு - 2 கப்
கருப்பட்டி வெல்லம் - சுவைக்கு ஏற்ப
சமையல் எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
உப்பு - ருசிக்கேற்ப



செய்முறை :

வாழைப்பழத்தை கழுவி சுத்தம் செய்யவும். தோலுடன் வாழைப்பழத்தை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதன் காம்பை கூட வெட்ட கூடாது.

இல்லையெனில் வாழைப்பழத்தின் உள்ளே தண்ணீர் நிரம்பி வாழைப்பழம் தண்ணீரால் குழைந்துவிட்டால் ஓமப்பொடி செய்வது கடினமாகிவிடும்.

குக்கரில் வைப்பதாக இருந்தால் வாழைப்பழத்தை 2-3 விசில் வரை வேக வைக்கவும். குக்கரின் ஆவி வெளியேறியதும் வாழைப்பழத்தை எடுத்து தோல் உரித்து பிசைந்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், அரிசி மாவு, பொடித்த கருப்பட்டி வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

இட்லி மாவில் ரிப்பன் பகோடா செய்யலாமா..? உடனே செய்யும் 5 நிமிட ரெசிபி...

இப்போது அதில் பிசைந்த வாழைப்பழம் மற்றும் 2 டீஸ்பூன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்கு கலந்து மாவைப் போல் பிசையவும்.

இடியாப்பம் சுடும் அச்சின் உள்ளே எண்ணெய் தடவி, ஒரு உருண்டை மாவை அதில் வைக்கவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் மாவை பிழிந்துவிடவும்.

இருபுறமும் சிவந்ததும் அதை வெளியே எடுத்துவிடுங்கள்.
சூடு சற்று குறைந்ததும் அதை உடைத்து, ஆறிய பிறகு காற்று புகாத கொள்கலனில் சேமித்து வையுங்கள்.

வீட்டில் செய்த இந்த இனிப்பான ஓமப்பொடியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Evening Snacks

அடுத்த செய்தி