Home /News /lifestyle /

சுண்டைக்காய் பொரியல் இப்படி செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்...

சுண்டைக்காய் பொரியல் இப்படி செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்...

சுண்டைக்காய் பொரியல்

சுண்டைக்காய் பொரியல்

இதை சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மட்டுமல்லாமல் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

    சுண்டைக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதோடு பல நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் இதன் கசப்பு தன்மை காரணமாக பலரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே இதை இப்படி செய்து கொடுத்து பாருங்கள். அனைவரும் விரும்புவார்கள். இதை சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மட்டுமல்லாமல் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள் :

    சுண்டைக்காய் - 200 கிராம்
    வெங்காயம், தக்காளி - 1
    எண்ணெய் - 4 tsp
    தேங்காய் - 4 பத்தை
    கடுகு - 1/2 tsp
    உளுத்தம் பருப்பு - 1/2 tsp
    மஞ்சள் தூள் - 1/2 tsp
    மிளகாய் தூள் - 1 tsp
    கரம் மசாலா - 1/4 tsp
    உப்பு - தே.அ
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    முதலில் சுண்டைக்காய்களை அலசிய பின் அவற்றை மத்து அல்லது உரலில் இரண்டாக பிரியாதவாறு இடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி இந்த சுண்டக்காய்களை சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளுங்கள். வெந்ததும் அந்த தண்ணீரை கீழே ஊற்றிவிட வேண்டும்.

    பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்க வேண்டும்.

    தாளித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். சிவந்ததும் தக்காளி சேர்க்க வேண்டும்.

    மழைக்காலத்தில் இஞ்சி சட்னி அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க... செரிமானம் நல்லா இருக்கும்... ரெசிபி இதோ...

    இரண்டும் ஒன்று சேர வெந்ததும் வேக வைத்த சுண்டைக்காயை சேர்த்து பிரட்ட வேண்டும்.

    பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து பிரட்டிக்கொள்ளுங்கள்.

    இதற்கு தண்ணீர் ஊற்றக்கூடாது எண்ணெயிலேயே பிரட்ட வேண்டும். எனவே சிறு தீயில் வைத்து பொடி வாசனை போனதும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    இதை சப்பாத்திக்குக் கூட தொட்டுக்கொள்ளலாம்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Food recipes

    அடுத்த செய்தி