ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சிம்பு சமைத்து வைரலான பனீர் மஷ்ரூம் மசாலா..நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பாருங்க..!

சிம்பு சமைத்து வைரலான பனீர் மஷ்ரூம் மசாலா..நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பாருங்க..!

பனீர் மஷ்ரூம் மசாலா

பனீர் மஷ்ரூம் மசாலா

னீர் மஷ்ரூம் மசாலா செய்வதை இன்ஸ்டாவில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். சிக்கனிற்கு பதில் பனீருக்கு மாறியாச்சு என்ற கேப்ஷனையும் எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சிம்பு சமையலில் ஆர்வம் காட்டி வருகிறார். லாக்டவுனில் போர் அடிக்கும்போதெல்லாம் இவருடைய கைப்பக்குவம்தான் வீட்டை மணக்க வைக்கிறது. இப்படி ஏற்கனவே இரண்டு முறை சமைத்து வீடியோ பதிவிட்டுள்ளார். அப்படி இந்த முறையும் பனீர் மஷ்ரூம் மசாலா செய்வதை இன்ஸ்டாவில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். சிக்கனிற்கு பதில் பனீருக்கு மாறியாச்சு என்ற கேப்ஷனையும் எழுதியுள்ளார்.

அதுமட்டுமன்றி தாடியை எடுத்துவிட்டு ஷேவ் செய்து பக்காவான தோற்றத்தில் மிளிர்கிறார். தாடி எடுத்த பிறகுதான் என் முகமே எனக்கு தெரியுது என வீடியோவில் பேசுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீங்களும் சிம்பு வீடியோ பார்த்துவிட்டு பனீர் மஷ்ரூம் மசாலா செய்ய நினைத்தால் ரெசிபி கீழே உள்ளது. இன்னைக்கே டிரை பண்ணுங்க.

தேவையான பொருட்கள் :

நெய் - 2 tsp

எண்ணெய் - 1tsp

சீரகம் - 1 tbsp

ஏலக்காய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 2 tbsp

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 2

தக்காளி - 2

மஞ்சள் - சிட்டிகை

உப்பு - சுவைக்கு ஏற்ப

கடலை மாவு - 1 tsp

சிவப்பு மிளகாய் தூள் - சுவைக்கு ஏற்ப

தனியா தூள் - 2 tbsp

பச்சை பட்டாணி - 1/2 கப்

தண்ணீர் - 1 கப்

காளான் - 1/2 கப்

பனீர் - 1/2 கப்

கரம் மசாலா - 1 tbsp

கஸ்தூரி மேதி - சிறிதளவு

ஃபிரெஷ் கிரீம் - 2 தேக்கரண்டி

கொத்துமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :

தக்காளியை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து நெய் ஊற்றுங்கள். உருகியதும் சீரகம், ஏலக்காய் சேர்த்து தாளியுங்கள்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் , பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பொன்னிறமாக வந்ததும் அரைத்த தக்காளி கூழ் சேர்த்து வதக்குங்கள்.

மிளகு குழம்பு சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா..? அப்போ இன்னைக்கே வெச்சிடுங்க..!

அதில் மஞ்சள், இப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வெந்துவிடும். அடுத்ததாக எண்ணெய் பிரிந்து வரும்போது தூள் வகைகளை சேர்த்து வதக்குங்கள். அதோடு பட்டாணியும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது அரை கப் தண்ணீர் சேத்து கொதிக்க வையுங்கள். பச்சை வாசனை போனதும் பனீர் மற்றும் மஷ்ரூம் சேர்த்து கிளறிவிட்டு மீண்டும் அரை கப் தண்ணீர் சேர்த்து தட்டுபோட்டு மூடிவிடுங்கள். சிறிது நேரம் கழித்து கஸ்தூரி மேதி தூவுங்கள்.

சிறு தீயில் சில நிமிடங்கள் கொதிக்கட்டும். உங்களுக்கு தேவையான கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவுங்கள்.

அவ்வளவுதான் பனீர் மஷ்ரூம் மசாலா தயார்.

First published:

Tags: Mushroom, Paneer, Simbu