வெயிலுக்கு இதைவிட சிறந்த பானம் என்னவாக இருக்க முடியும். அதுவும் ஆரோக்கியமான முறையில் நொடியில் எளியாமையாக கிடைக்கிறது எனில் சிறப்புதானே. வறண்ட தொண்டைக்கு குளுர்ச்சியூட்டும் இந்த பானத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரோஸ் சிரப் - 100 ml
சியா விதைகள் - 2 tbsp
எலுமிச்சை சாறு - 1 tbsp
ஐஸ் கட்டிகள் - 10
குளிர்ந்த நீர் - 600 ml
செய்முறை :
சியா விதைகளை 15 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள்.
பின் ஒரு கிளாசில் சிரப் ஊற்றி அதில் எலுமிச்சை சாறு பிழிந்துவிடுங்கள்.
பின் அதில் சியா விதைகளை சேர்த்து குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்.
இறுதியாக அதில் ஐஸ் கட்டிகளை விருப்பம் போல் சேர்த்து பருகலாம். ரோஜா இதழ்கள் இருந்தால் அதை மேலே தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
அவ்வளவுதான் ரோஸ் சர்பத் தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.