Home /News /lifestyle /

இந்த ரம்ஜானுக்கு மட்டன் பிரியாணி செய்யப்போறீங்களா..? இப்படி செஞ்சு பாருங்க... இதுவரை சாப்பிடாத சுவை கிடைக்கும்..!

இந்த ரம்ஜானுக்கு மட்டன் பிரியாணி செய்யப்போறீங்களா..? இப்படி செஞ்சு பாருங்க... இதுவரை சாப்பிடாத சுவை கிடைக்கும்..!

மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி

ரம்ஜான் அன்றைக்கு பிரியாணி முக்கியம் அதுவும் மட்டன் பிரியாணி என்றால் அதைவிட வேறென்ன வேண்டும்..? அப்படி வீட்டிலேயே அருசுவையில் மட்டன் பிரியாணி செய்ய ரெசிபி இதோ...

ரம்ஜான் என்றாலே பிரியாணிதான். அன்றைய நாளில்தான் கண்ணுக்கு தெரியாத முஸ்லிம் நண்பர்களெல்லாம் நினைவுக்கு வருவார்கள். பிரியாணிதான் எங்கு திரும்பினாலும் கிடைக்கிறதே என்று கேட்கலாம். ஆனால் அதெல்லாம் முஸ்லீம் வீட்டு ரம்ஜான் பிரியாணி சுவைக்கு ஈடாகாது என்பதே பலரின் பதிலாக இருக்கும். சிலர் முஸ்லீமாக இல்லாவிட்டாலும் அன்றை நாள் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிடுவார்கள்.

இப்படி எதுவாயினும் ரம்ஜான் அன்றைக்கு பிரியாணி முக்கியம் அதுவும் மட்டன் பிரியாணி என்றால் அதைவிட வேறென்ன வேண்டும்..? அப்படி வீட்டிலேயே அருசுவையில் மட்டன் பிரியாணி செய்ய ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - 3 கப்
மட்டன் - அரை கிலோ
தக்காளி - 3
சின்ன வெங்காயம் - 15
பெரிய வெங்காயம் - 4
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 25 பற்கள்
பச்சை மிளகாய் - 6
கிராம்பு - 4
பட்டை - 4 துண்டு
ஜாதிக்காய் - பாதி
ஏலக்காய் - 4
மிளகாய் தூள் - 1 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/2 tsp
கரம் மசாலா - 1/4 tsp
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 tsp
எலுமிச்சைப் பழம் - பாதி
நெய் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
உப்பில்லாத வெண்ணெய் -அரை கப்
தேங்காய் - ஒரு மூடி
முந்திரி - 15
தயிர் - அரை கப்
புதினா - ஒரு கட்டு
மல்லித் தழை - ஒரு கட்டு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

கிராம்பு - 3
பட்டை - 3 துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - 1 tsp



செய்முறை:

1 . மட்டனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின் குக்கரில் மட்டனை போட்டு அதோடு கால் கப் தயிர், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட் மற்றும் ஒரு மேசைக்கரண்டி உப்பு ஆகியவை சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

2 . அடுத்ததாக மிக்ஸியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3 . மீண்டும் மிக்ஸியில் தேங்காய், இஞ்சி, முந்திரி சேர்த்து அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

4 . பிறகு , அகலமான பாத்திரத்தில் வெண்ணெய்,நெய், எண்ணெய் மூன்றையும் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.

வெயிலுக்கு இதன் தரும் மாம்பழ லஸ்ஸி... இப்படி செய்து குடித்து பாருங்கள்... சுவை அருமையோ... அருமை...

5 . அடுத்ததாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

6 . வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். இவற்றை 2 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும்.
வதங்கியதும், மிளகாய் பொடி மற்றும் அரைத்து வைத்துள்ள பட்டை , கிராம்பு பொடியை சேர்த்துக் கொள்ளவும்.

7 . அந்த கலவையில் எண்ணெய் பிரிந்து தனியே வந்ததும் நறுக்கிய தக்காளிகளைச் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், தயிர் சேர்த்துக் கொள்ளவும்.

8 . அடுத்ததாக எடுத்து வைத்துள்ள 4 கப் தேங்காய் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு மட்டன் வேக வைத்த தண்ணீரை இரண்டு கப்புகளாக எடுத்துக் கொண்டு அதையும் பாத்திரத்தில் ஊற்றவும். பிறகு வேகவைத்த மட்டனையும் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு, தேவையான அளவு உப்பு, புதினா இலைகள், கொத்தமல்லி தழைகளைச் சேர்த்து கலக்கவும்.

9 . அந்த கலவை ஒரு கொதி வந்ததும் அரிசியை கழுவிக் கொட்டவும். பிரியாணி பாதியளவு வெந்ததும் அதில் எலுமிச்சை சாற்றை விதைகளை நீக்கிப் பிழிந்து விடவும்.

10 . பின் மீண்டும் தட்டு போட்டு மூடி பிரியாணி உதிரி உதிரியாக வெந்ததும் இறக்கி விடவும்.

சுவையான தேங்காய் பால் பிரியாணி ரெடி.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Mutton Biriyani, Ramzan

அடுத்த செய்தி