ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காலை உணவை ஆரோக்கியமாக மாற்றும் ராகி இட்லி : ஒரு முறை இப்படி சுட்டு பாருங்க..!

காலை உணவை ஆரோக்கியமாக மாற்றும் ராகி இட்லி : ஒரு முறை இப்படி சுட்டு பாருங்க..!

ராகி இட்லி

ராகி இட்லி

ராகியை பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. இருப்பினும், அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் விதிவிதமான ராகி டிஷ்களை செய்து கொடுக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராகியை வைத்து குழந்தைகளுக்கு இந்த மாதிரி சுவையான டிஷ் வகைகளை செய்து கொடுங்க. கட்டாயம் விரும்பி சாப்பிடுவாங்க.

ராகி ஆரோக்கியமான மற்றும் மிகவும் சுவையான முழு தானியங்களில் ஒன்றாகும். இதில் கால்சியம், புரதம், வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. ராகி ஒரு குளுட்டன்-பிரீ தானியம் மற்றும் சந்தையில் எளிதாக கிடைக்கிறது. இந்த சத்தான தானியத்தை உங்கள் குழந்தையின் உணவில் கட்டாயம் சேர்ப்பது அவசியம்.

ஆனால் ராகியை பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. இருப்பினும், அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் விதிவிதமான ராகி டிஷ்களை செய்து கொடுக்கலாம். இதனால் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான சத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

முழு ராகி - ஒரு கப்

ராகி தினை - ஒரு கப்

அரிசி - அரை கப்

உளுந்து - ஒரு கப்

அவல் - மூன்று டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், அரிசி, உளுந்து, ராகி மற்றும் வெந்தயம் சேர்த்து சுமார் 5 மணி நேரம் ஊறவைத்து பிறகு அதனை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இட்லி மாவு அரைப்பது போல் அரைக்கவும்.

Also Read : வாழைக்காயில் வடை செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி..!

பின்னர் அரைத்த கலவையுடன் உப்பு சேர்த்து கலக்கி சுமார் ஆறு மணி நேரம் மாவை புளிக்கவிடவும்.

இறுதியாக, வழக்கம்போல் இட்லி ஊற்றுவதைப் போல் இந்த கலவையை ஊற்றி வேகவிட்டு இறக்கி காலை சுற்றுண்டியாக பரிமாறலாம்.

First published:

Tags: Breakfast, Idli, Ragi