பொதுவாகவே பப்பாளி பழம் நமக்கு பல மருத்துவ நன்மைகளை அளிக்கிறது. அதுவும் பழுக்காத காயாக இருக்கும் பப்பாளியில் கூடுதல் நன்மைகளைப் பெறலாம். ஆனால் அதை அப்படியே சாப்பிட முடியாவிட்டாலும் இப்படி அருமையான சுவையில் கூட்டு செய்யலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பப்பாளிக்காய் - 2 கப்
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
சிறு பருப்பு - 1/3 கப்
மஞ்சள் பொடி - 1/4 tsp
உப்பு - தே.அ
அரைக்க :
தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 tsp
தாளிக்க :
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெங்காயம் - 1
கறிவேப்பிலை/ கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
முதலில் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.
குக்கரில் பப்பாளியின் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி போடுங்கள். அதோடு சிறு பருப்பு, தக்காளி , பச்சை மிளகாய்,மஞ்சள், உப்பு சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் விரும்பு உருளைக்கிழங்கு சாதம் : இப்படி செஞ்சு கொடுங்க.. ஒரு பருக்கை கூட மிஞ்சாது...
2-3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விசில் போனதும் திறங்கள். பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
அதை அப்படியே அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
அதேசமயம் மற்றொரு கடாய் வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கூட்டில் சேர்த்துக் கிளறுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் பப்பாளிக்காய் கூட்டு தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Papaya