ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மாங்காய் போட்டு காராமணி குழம்பு செஞ்சிருக்கீங்களா..? செம்ம டேஸ்ட்.. டிரை பண்ணி பாருங்க..!

மாங்காய் போட்டு காராமணி குழம்பு செஞ்சிருக்கீங்களா..? செம்ம டேஸ்ட்.. டிரை பண்ணி பாருங்க..!

மாங்காய் போட்டு காராமணி குழம்பு

மாங்காய் போட்டு காராமணி குழம்பு

மாங்காயின் புளிப்பு சுவையில் குழம்பு இன்னும் ருசியாக இருக்கும். அந்த சுவையை நீங்கும் பெற இதோ ரெசிபி...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காராமணியை தனியாக வேக வைத்து சாப்பிடுவதைக் காட்டிலும் இப்படி காரக்குழம்பு செய்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதிலும் மாங்காயின் புளிப்பு சுவையில் குழம்பு இன்னும் ருசியாக இருக்கும். அந்த சுவையை நீங்கும் பெற இதோ ரெசிபி...

தேவையான பொருட்கள் :

மாங்காய் - 1

வெங்காயம் - 2

தக்காளி - 2

காராமணி - 150 கிராம்

குழம்பு மிளகாய் தூள் - 3 tsp

பூண்டு - 6 பற்கள்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கடுகு- 1 tsp

வெந்தயம் - 1/2 tsp

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 3 tsp

உப்பு - தே.அ

செய்முறை :

காரமணியை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள். காய்ந்ததும் கடுகு , வெந்தயம் சேர்த்து பொறித்துக்கொள்ளுங்கள்.

பின் வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கி வந்ததும் மிளகாய் தூள் , உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

இப்போது வேக வைத்த காராமணியை தண்ணீரோடு சேர்த்து கலந்துவிடுங்கள். தண்ணீர் தேவைப்பட்டால் கலந்துகொள்ளுங்கள்.

உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது தட்டுப்போட்டு மூடி மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தூவி குழம்பை இறக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான் மாங்காய் போட்ட காராமணி குழம்பு தயார். இதில் முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.

First published:

Tags: Curry Recipes, Food recipes