Home /News /lifestyle /

போண்டா சூப் கேள்விப்பட்டிருக்கீங்களா..? கர்நாடகாவில் இதுதான் ஸ்பெஷலாம்... நீங்களும் சுவைக்க ரெசிபி இதோ...

போண்டா சூப் கேள்விப்பட்டிருக்கீங்களா..? கர்நாடகாவில் இதுதான் ஸ்பெஷலாம்... நீங்களும் சுவைக்க ரெசிபி இதோ...

போண்டா சூப்

போண்டா சூப்

இது கர்நாடகாவின் ஸ்பெஷல் ஸ்ட்ரீட் ஃபுட் எனலாம். இதற்காக கர்நாடகா வரை போக வேண்டிய அவசியமில்லை... வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம்.

    போண்டா என்றாலே அதை மாலையில் ஒரு காகிதத்தில் வைத்து பிச்சி சாப்பிட்டு பின் ஒரு கப் டீ குடிப்பதுதான் பலருக்கும் வழக்கமாக இருக்கும். ஆனால் இது தயிர் வடை போல போண்டா சூப். போண்டாவை சூப்பில் ஊற வைத்து சாப்பிடும் சுவையும் தனி ரகம்தான். இது கர்நாடகாவின் ஸ்பெஷல் ஸ்ட்ரீட் ஃபுட் எனலாம். இதற்காக கர்நாடகா வரை போக வேண்டிய அவசியமில்லை... வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். ரெசிபி இதோ...

    தேவையான பொருட்கள் :

    உளுத்தம் பருப்பு - 1கப்
    தேங்காய் - 1/4 கப்
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1 tsp
    சீரகம் - 1/2 tsp
    உப்பு - தே.அ
    கறிவேப்பிலை - சிறிதளவு

    சூப் செய்ய பொருட்கள் :

    எண்ணெய் - 250 கிராம்
    துவரம் கருப்பு - 1/2 கப்
    கடுகு - 1/2 tsp
    சீரகம் - 1/2 tsp
    பச்சை மிளகாய் - 5
    வெங்காயம் -1
    தக்காளி - 1
    உப்பு - தே.அ
    மஞ்சள் தூள் - 1/4 tsp
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    எலுமிச்சை சாறு - 1 tsp
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    உளுத்தம் பருப்பை 2 மணி நேரத்திற்கு ஊற வைத்துவிடுங்கள். பின் அதை மெது வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    இப்போது அரைத்த மாவில் துருவிய தேங்காய், பொடியா நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி , சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள்.

    இப்போது அதில் உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.பின் அதை நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

    அடுத்ததாக கடாய் வைத்து போண்டா பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய வையுங்கள்.

    காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சம் மாவு எடுத்து உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்படி அனைத்து மாவிலும் போண்டா சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

    10 நிமிடத்தில் செட்டிநாடு சிக்கன் கிரேவி... இப்படி செஞ்சா சமையல் செஞ்ச அலுப்பே தெரியாது...

    அடுத்ததாக சூப் செய்ய வேண்டும்...

    அதற்கு முதலில் துவரம் பருப்பை வேக வைத்து மசித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

    பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்று காய வையுங்கள்.

    பின் கடுகு, சீரகம் , கறிவேப்பிலை , பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

    இப்போது மசித்த பருப்பு சேர்த்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றுங்கள்.

    பின் மஞ்சள் தூள், உப்பு , பெருங்காயத்தூள் சேர்த்து 3 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.

    பின் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி தூவி விட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் சூப் ரெடி...

    இப்போது ஒரு போண்டா வைத்து அது மூழ்கும் அளவுக்கு இந்த சூப்பை ஊற்றி பரிமாறுங்கள். அவ்வளவுதான் போண்டா சூப் தயார்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Evening Snacks, Soup

    அடுத்த செய்தி