குல்ஃபி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. வெயில் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குல்ஃபியை விரும்பி சாப்பிடுவர். குல்பியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதிலும் குல்ஃபியில் சாக்லேட் குல்ஃபி என்றால் அனைவருக்கும் கட்டாயம் பிடிக்கும். இந்த குல்ஃபி முழுக்க முழுக்க சாக்லெட்டால் செய்யப்படுகிறது. மேலும் இதனை வீட்டிலேயே நீங்கள் மிக எளிதாக செய்யலாம்.
இந்த செயல்முறையில் குல்ஃபியை குறைந்தது 6-8 மணிநேரங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் உறைய வைக்க வேண்டும். மேலும் இதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவதன் மூலம் குல்ஃபி சாப்பிடுவதை ஆரோக்கியமானதாக மாற்றலாம். எனவே, இந்த செய்முறையை பின்பற்றி வீட்டிலேயே குல்ஃபி தயாரித்து பாருங்கள்.
குல்ஃபி தயாரிக்க தேவையான பொருட்கள்:
பால் - 4 கப்
பால் பவுடர் - 3 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 கப்
பிரஷ் கிரீம் - 2 கப்
கோகோ பவுடர் - 3 டீஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ் - 6 டீஸ்பூன்
செய்முறை:
1. ஒரு கடாயில், பால், பிரஷ் கிரீம் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும். இந்த கலவை ஒரு கொதி நிலைக்கு வரும் வரை சூடேற்றவும். பின்னர் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் சூடுபடுத்தவும்.
2. இப்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி மற்றொரு 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
3. இப்போது பால் கிரீமியாக மாறியதும், சோகோ சிப்ஸ் மற்றும் கோகோ பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும்.
4. சாக்லேட் கரையும்வரை நன்கு கலக்கவும். இறுதியாக அடுப்பை
அனைத்துவிட்டு கலவையை சிறிது குளிர்விக்க வேண்டும்.
ஃபிங்கர் சிக்கன் இப்படித்தான் செய்யனுமா..? ஈசியான ரெசிபி இதோ...
5. பின்னர் குல்பி அச்சுகளில் கலவையை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். சுமார் 6 முதல் 8 மணி நேரம் குளிர்விக்க வேண்டும்.
6. அச்சுகளில் கலவை சரியாக உறைந்ததும் அவற்றில் இருந்து குல்பியை வெளியே எடுத்து பரிமாறலாம்.
இது தவிர மக்கள் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய மலாய் குல்ஃபியை கூட நீங்கள் வீட்டிலேயே செய்து அசத்தலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.