Home /News /lifestyle /

சிக்கன் வாங்கினால் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க... அனைவரும் உங்கள் கிட்ட ரெசிபி கேட்டு நிப்பாங்க..!

சிக்கன் வாங்கினால் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க... அனைவரும் உங்கள் கிட்ட ரெசிபி கேட்டு நிப்பாங்க..!

கார்லிக் சிக்கன் கிரேவி நம்ம ஊர் ஸ்டைலில்

கார்லிக் சிக்கன் கிரேவி நம்ம ஊர் ஸ்டைலில்

இதை சாதம் மட்டுமல்ல சாப்பாத்தி, இட்லி, தோசைக்குக் கூட தொட்டுக்கொள்ளலாம்.

சிக்கனை எப்படி செய்தாலும் அது சுவை கொடுக்கும். அதை பக்குவமாக பார்த்து பார்த்து பதமாக செய்தால் இன்னும் எத்தனை ருசியாக இருக்கும்..? அப்படியொரு ரெசிபிதான் இது. இதை சாதம் மட்டுமல்ல சாப்பாத்தி, இட்லி, தோசைக்குக் கூட தொட்டுக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
எண்ணெய் - 2 tbsp
சோம்பு - 1 tbsp
வெங்காயம் - 2
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 tbsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tbsp
மிளகாய் தூள் - 2 tbsp
மல்லித்தூள் - 3 tbsp
மிளகுத்தூள் - 1 tbsp
கரம் மசாலா - 1 tbsp
பூண்டு - 7 பல்
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை

சிக்கனை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளியுங்கள்.

பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வந்தங்கியதும் மஞ்சள் தூள் , கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள்.

இப்போது சிக்கனை சேர்த்து பிரட்டிவிடுங்கள் . சிறிது நேரம் வெந்ததும் தக்காளி சேர்த்து பிரட்டி விடுங்கள்.

காலையில் 5 நிமிடத்தில் செய்யக் கூடிய சுட சுட வெஜ் சாண்ட்விச்..!

அடுத்ததாக மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.

10-15 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

இதற்கிடையில் சின்ன கடாய் வைத்து எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்குங்கள். அதோடு 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட்டு தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

10 நிமிடங்கள் கழித்து குழம்பை திறந்து அதில் கரம் மசாலா தூவுங்கள். பின் வதக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவுங்கள்.

அவ்வளவுதான் கார்லிக் சிக்கன் கிரேவி நம்ம ஊர் ஸ்டைலில் தயார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Chicken Recipes

அடுத்த செய்தி