ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பிஸ்கட்டை வைத்து சூப்பரான புட்டிங் செய்யலாம் : எப்படி தெரியுமா..?

பிஸ்கட்டை வைத்து சூப்பரான புட்டிங் செய்யலாம் : எப்படி தெரியுமா..?

புட்டிங்

புட்டிங்

நீங்கள் நினைக்கும் போதெல்லாம் 15 நிமிடத்தில் உங்கள் கை பக்குவத்தில் செய்து சாப்பிடலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிலருக்கு புட்டிங் மிகவும் பிடிக்கும். அதிலும் அதில் சேர்க்கக் கூடிய கேரமல் சுவைக்காகவே அதை விரும்பி சாப்பிடுவார்கள். புட்டிங் சற்று விலை கூடுதலாக இருக்கும் என்பதால் என்னதான் பிடித்த உணவாக இருந்தாலும் அடிக்கடி சாப்பிட முடியாது. ஆனால் இனி அப்படி இல்லை. நீங்கள் நினைக்கும் போதெல்லாம் 15 நிமிடத்தில் உங்கள் கை பக்குவத்தில் செய்து சாப்பிடலாம். எப்படி தெரியுமா..?

தேவையான பொருட்கள் :

அரைக்க :

மேரி பிஸ்கட் - 15

முட்டை - 3

சர்க்கரை - 1/2 கப்

உப்பு - 1/4 ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்

தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சிய பால் - 1 கப்

கேரமல் செய்ய :

சர்க்கரை - 1/2 கப்

தண்ணீர் - 1/4 கப்

செய்முறை :

அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதை தனியாக வைத்துவிடுங்கள்.

கேரமல் செய்ய பாத்திரத்தில் சர்க்கரை , தண்ணீர் சேர்த்து மிகவும் மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள். அதிக தீ சர்க்கரையை கசப்பு தன்மையை தரும்.

கைவிடாமல் கிளறிக்கொண்டே இருந்தால் பிரவுன் நிறத்தின் நன்கு கரைந்திருக்கும். பிரவுன் நிறம் வரும் வரை கைவிடாமல் கிளறுங்கள். கெட்டித்தன்மையும் அவசியம்.

பின் அதை உடனே புட்டிங் செய்ய வைத்திருக்கும் பாத்திரத்தில் ஊற்றிவிடுங்கள். நீங்கள் எடுக்கும் பாத்திரம் குக்கருக்குள் வைக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றார்போல் எடுங்கள்.

இப்போது அதன் மேல் அரைத்த பிஸ்கட் கலவையை சேர்த்து சமன் செய்துவிடுங்கள்.

கல்யாண வீட்டு பிரட் அல்வா.. இதை செய்வது இவ்ளோ ஈஸியா!

இப்போது குக்கரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இந்த பாத்திரத்தின் மேல் சில்வர் பேப்பர் கொண்டு மூடிவிட்டு உள்ளே வைத்துவிடுங்கள்.

30 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து திறந்து பாருங்கள் உப்பி நன்கு வெந்திருக்கும்.

ஓரங்களை சுற்றி கீறிவிட்டு ஒரு தட்டில் வைத்து பாத்திரத்தை கவிழ்த்து தட்டினால் புட்டிங் ரெடி..!

Published by:Sivaranjani E
First published:

Tags: Sweet recipes