Home /News /lifestyle /

சுட சுட சிக்கன் பிரெட் பஜ்ஜி... மாலையில் ஒரு கப் டீ யுடன் சாப்பிட்டால் எப்படி இருக்கும்..! ரெசிபி இதோ

சுட சுட சிக்கன் பிரெட் பஜ்ஜி... மாலையில் ஒரு கப் டீ யுடன் சாப்பிட்டால் எப்படி இருக்கும்..! ரெசிபி இதோ

சிக்கன் பிரெட் பஜ்ஜி

சிக்கன் பிரெட் பஜ்ஜி

நீங்களும் மாலை வேளையில் சூடாக சாப்பிட விரும்புகிறீர்கள் எனில் இந்த சிக்கன் பிரெட் பஜ்ஜி உங்கள் நாவுக்கு விருந்தாக இருக்கும்.

    மழைப் பெய்யும் மாலை வேலையில் கையில் சுட சுட ஏதாவது இருந்தால் அதைவிட பேரானந்தம் இருக்க முடியாது. இது போன்றதொரு ஆசையை விரும்பாதவர்களும் இருக்க முடியாது. அப்படி நீங்களும் மாலை வேளையில் சூடாக சாப்பிட விரும்புகிறீர்கள் எனில் இந்த சிக்கன் பிரெட் பஜ்ஜி உங்கள் நாவுக்கு விருந்தாக இருக்கும். ரெசிபி இதோ...

    தேவையான பொருட்கள்

    பிரெட் துண்டுகள் - 5
    சிக்கன் பிரெஸ்ட் - 360 கிராம்
    உப்பு - 1/2 Tsp
    மிளகுப் பொடி - 1/2 Tsp
    தாளிக்க
    எண்ணெய் - 1.5 Tsp
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 Tsp
    பச்சை மிளகாய் - 1
    வெங்காயம் - 1
    மிளகாய்ப் பொடி - 1/4 Tsp
    கரம் மசாலாப் பொடி - 1/4 Tsp
    வினிகர் - 1 Tsp
    கடலை மாவு - 230 கிராம்
    உப்பு - 1/4 Tsp
    மிளகாய் பொடி - 1/4 Tsp
    மஞ்சள் பொடி - 1/4 Tsp
    பேக்கிங் சோடா - 1/4 Tsp
    தண்ணீர் - 300 ml



    செய்முறை

    சிக்கன் பிரெஸ்டில் உப்பு மற்றும் மிளகுத் தடவி வேக வைத்துக் கொள்ளுங்கள். பின் அதை பிச்சி போட்டபடி பிரியுங்கள்.

    கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய் பொடி, கரம் மசலாப் பொடி சேர்த்து வதக்கவும். இறுதியாக வினிகர் சேர்த்து வதக்கி இறக்கி விடவும்.

    பவுலில் கடலை மாவு உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள், பேக்கிங் சோடா ஆகிவற்றை நன்குக் கலந்து கொள்ளுங்கள். தற்போது தண்ணீர் ஊற்றி தண்ணீர் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

    மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்

    அடுத்ததாக பிரெட்டை முக்கோன வடிவில் கிராஸ் சைஸில் வெட்டிக் கொள்ளுங்கள் அதில் ஒரு பிரெட்டில் சிக்கன் கலவையை வையுங்கள். அதன் மேல் மற்றொரு பாதி பிரெட்டை வைத்து மூடிவிடுங்கள்.

    தற்பொது கடாயில் பொறிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி காயவிடுங்கள்.

    தற்போது அந்த பிரெட் ஸ்டஃப கடலைமாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுங்கள்.

    சுவையான சிக்கன் பிரெட் பஜ்ஜி தயார்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Evening Snacks

    அடுத்த செய்தி