ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இரவு சுட்ட சப்பாத்தியில் சாண்ட்விச் செய்யலாம்... காலை உணவுக்கான ரெசிபி..!

இரவு சுட்ட சப்பாத்தியில் சாண்ட்விச் செய்யலாம்... காலை உணவுக்கான ரெசிபி..!

இரவு சுட்ட சப்பாத்தியில் சாண்ட்விச்

இரவு சுட்ட சப்பாத்தியில் சாண்ட்விச்

உங்கள் வீட்டில் சப்பாத்திகள் மீதமாகிவிட்டால் சப்பாத்தி சாண்ட்விச் செய்யலாம். இது மிகவும் எளிமையான செய்முறை என்பதால், விரைவாக செய்து விடலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுடன் நாளை துவங்கினால், அந்த நாள் மிகவும் இனிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். உங்கள் காலை உணவில் சப்பாத்தி மீதமாகிவிட்டதா? அவற்றை வீணாக்காமல் ஒரு சுவையான ஸ்னாக்ஸ் செய்ய புதுமையான வழியில் அவற்றைப் பயன்படுத்தலாம்.

  உங்கள் வீட்டில் சப்பாத்திகள் மீதமாகிவிட்டால் சப்பாத்தி சாண்ட்விச் செய்யலாம். இது மிகவும் எளிமையான செய்முறை என்பதால், விரைவாக செய்து விடலாம். மீதமுள்ள சப்பாத்திகள், காய்கறிகளும், மசாலாப் பொருட்கள் மற்றும் சில சாஸ்களும் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. இது சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருப்பதால் உங்கள் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இதில் சேர்க்கப்படும் காய்கறிகளும், சாஸும் உங்கள் சுவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம்.

  தேவையான பொருட்கள் :

  சப்பாத்தி - 4

  சோளம் - 1/4 கப்

  முட்டைக்கோஸ் - 1/2 கப்

  சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

  மயோனைஸ் - 2 தேக்கரண்டி

  வெண்ணெய் - 2 டீஸ்பூன்

  வெங்காயம் - 1/2 கப்

  கேப்சிகம் - 1/2 கப்

  எண்ணெய் - 1 தேக்கரண்டி

  கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

  தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி

  சீஸ் - 4 துண்டுகள்

  உப்பு - தேவையான அளவு

  செய்முறை :

  ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கவும். அதில் வெங்காயம், கேப்சிகம் மற்றும் சோளம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். பின்னர் 2-3 டீஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.

  கடைசியாக முட்டைக்கோஸ் சேர்த்து, இன்னும் இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிடவும். இந்த காய்கறி கலவையில் தக்காளி சாஸ் மற்றும் மயோனைஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

  இப்போது சப்பாத்தியை உங்கள் விருப்பப்படி வெட்டி ஒரு துண்டை எடுத்து அதில் காய்கறி கலவையை எடுத்து நிரப்பவும்.

  Also Read : வீட்டிலேயே கேக் செய்ய டிரை பண்ணலாம்னு இருக்கீங்களா..? அதுக்கு முன்னாடி இதை படியுங்க..

  அதன் மீது சீஸ் சேர்த்து சப்பாத்தியை பாதியாக மடியுங்கள். ஒரு பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் சூடாக்கி, அதில் நீங்கள் தயாரித்த சப்பாத்தி சாண்ட்விச்களை வைக்கவும். சிறிது பொன்னிறமாகும் வரை இருபுறமும் சமைத்து பரிமாறவும்.

  வழக்கமாக, உணவகங்களில் நீங்கள் வசதியான கடைகள் அல்லது ஆர்டர் வாங்குவதில் சாண்ட்விச்கள் கொழுப்பு மற்றும் கலோரிகளில் மிக அதிகமாக இருக்கின்றன.

  ஆனால் நீங்கள் வீட்டில் செய்யும் சாண்ட்விச்கள் ஆரோக்கியமானது என்பதால் உங்கள் குழந்தைகளுக்கு தயக்கமின்றி கொடுக்கலாம். அதேபோல எடை குறைக்க நினைப்பவர்கள் மாயோனைஸ் தவிர்த்து விடலாம், மேலும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Breakfast, Chapathi, Sandwich recipes