• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இனி தினமும் இந்த சாலட்-ஐ செஞ்சு சாப்பிடுங்க...

இனி தினமும் இந்த சாலட்-ஐ செஞ்சு சாப்பிடுங்க...

பாலக் கீரை-கொண்டைக்கடலை சாலட் செய்ய ரெசிபி...

  • Share this:
    தினமும் இந்த பாலக்கீரையையும் கொண்டைக்கடலையையும் சாலட் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். முடி வளர்ச்சிக்கும் நல்லது.

    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 1 கப்

    தக்காளி - 1

    கொண்டைக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்

    பேபி கார்ன் - 6 துண்டுகள்

    மிளகுத்தூள் - சிறிதளவு

    எலுமிச்சை சாறு - பாதி

    செய்முறை

    முதலில் தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
    எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.
    பேபி கார்ன், கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.
    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டி சுடு தண்ணீரில் 1 நிமிடம் வரை போட்டு எடுக்கவும்.
    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பாலக்கீரை, தக்காளி சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அடுத்து இதில் வேக வைத்த கொண்டைக்கடலையைப் போட்டு கிளறவும். மேலும், வெட்டி வைத்த பேபி கார்ன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம். சூப்பரான சத்தான பாலக் கீரை - கொண்டைக்கடலை சாலட் ரெடி.

    மேலும் படிக்க... வெஜிடபிள் வெள்ளை குருமா செய்ய ரெசிபி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: