முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புதினா சட்னி தெரியும்.. அதென்னை புதினா பொடி..? இதோ ரெசிபி..!

புதினா சட்னி தெரியும்.. அதென்னை புதினா பொடி..? இதோ ரெசிபி..!

தோசையின் சுவையை அதிகரிக்கும் புதினா பொடி செய்முறை

தோசையின் சுவையை அதிகரிக்கும் புதினா பொடி செய்முறை

இயல்பாக நமது வீடுகளில் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் தனித்தனியாக பொடி வைத்திருப்போம். ஆனால், இவை அனைத்திற்கு ஏத்த புதினா பொடி பற்றி தெரியுமா?. இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் இந்த ஒரு பொடி போதும்!

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பருப்பு பொடி, புளியோதரை என்றது நம் அனைவருக்கும் நியாபகம் வருவது ஐயர் வீட்டு புளியோதரையும், செட்டிநாடு பருப்பு பொடியும் தான். என்னதான் நாம் செய்தாலும், அவர்களின் சுவை நமக்கு வருவதில்லை என பல முறை யோடித்திருப்போம். அந்தவகையில், இன்று நாம் ஐயர் வீட்டு சுவையில் புதினா போடி எப்படி அரைப்பது என பார்க்கலாம். இட்லி, தோசை மற்றும் வெள்ளை சாதம் என அனைத்து வகை உணவுக்கும் தோதாக இருக்கும் புதினா பொடியை எப்படி தயார் செய்வது என நாம் காணலாம்.

தேவையான பொருட்கள்:

புதினா - 1 கட்டு.

கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்.

உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்.

மிளகு – 1/2 ஸ்பூன்.

சீரகம் - 1/2 ஸ்பூன்.

வெந்தயம் – 1/4 ஸ்பூன்.

வர மிளகாய் - 10.

மல்லி விதை - 2 ஸ்பூன்.

பூண்டு பல் – 5.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

புதினா கார பொடி செய்வதற்கு முன்னதாக, பொடி செய்ய எடுத்துக்கொண்ட புதினாவை நன்கு சுத்தம் செய்து, தண்டை நீக்கி இலைகளை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.

தற்போது, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் மல்லி விதைகளை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே எண்ணையில், காரத்திற்கு ஏற்றார் போல 5 வர மிளகாய் வத்தலை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெயுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, வர மல்லி விதைகள் உள்ள பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

Also Read | ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும் சுண்டல் ரெசிபிகள்!

பின்னர், சிறிதளவு எண்ணெயுடன் மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றையும் சேர்த்து வறுக்கவும். வாசம் மாறும் நிலையில் இதனுடன், புதினா, பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். தேவைப்பட்டால், தேங்காயை துருவி ஒரு கைப்பிடி அளவு சேர்த்துக்கொள்ளலாம்.

புதினா வதங்கியதும் அடுப்பை அணைத்து, சேர்மத்தை சூடு இல்லாமல் நன்கு ஆறவிடவும். பின்னர், இந்த சேர்மத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.

பின்னர், இதேப்போன்று மல்லி விதைகள் - பருப்பு சேர்மத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு உப்புடன் சேர்த்து பொடியாக அரைக்கவும். வீட்டில் உள்ள காய்ந்து போன புதினா இலைகளையும் பயன்படுத்தலாம்.

பின்னர் இந்த இரண்டு பொடிகளையும் ஒன்றாக சேர்த்து ஒருமுறை அரைத்துக்கொள்ள புதினா கார பொடி ரெடி.

பொடியாக அரைத்து வைத்துள்ள இந்த புதினா கார பொடியுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து குழைத்துக்கொள்ளவும். பின்னர், இந்த பொடி சேர்மத்துடன் இட்லி, தோசை, வெள்ளை சாதம் என உங்களுக்கு பிடித்த உணவினை சேர்த்து பரிமாறலாம். சாதத்துடன் சாப்பிடும் போது இதில் எண்ணெய்க்கு பதில் நெய் சேர்த்துக்கொண்டால் சுவை அதிகரிக்கும்.

First published:

Tags: Food recipes, Healthy Food, Mint Chutney