பெண்களுக்கு தாய்ப்பால் என்பது இயற்கை அளித்துள்ள வரம் என்று சொன்னால் அது மிகையாகாது. எனவே, பெண்களின் மார்புகளில் பால் சுரப்பு குறைவு என்பது மனம் சார்ந்த பிரச்சனையே என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
பெண்களுக்கு பால் குறைவாக சுரக்கிறது என்பது மாயை. இருப்பினும், ஒரு தாய்க்கு பால் சுரப்பது குறைவாக இருக்கிறது என்றால், அது உடல்ரீதியான சில பிரச்சனைகளின் வெளிப்பாடாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. மேலும், இதுகுறித்து குறிப்பாக எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், உணவு பழக்க முறைகளில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தூக்கமின்மை, முறையற்ற உணவு பழக்கங்கள் ஆகியவை பால் சுரப்பை குறைக்க காரணமாக அமையலாம் என்பதால் தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இது என்னுடைய குழந்தை, என்னால் இந்த குழந்தைக்கு முழுமையாக பாலூட்ட முடியும் என்கிற அந்த உணர்வே ஒரு தாய்க்கு தன் குழந்தைக்கான நல்ல பால் சுரப்பை உறுதிப்படுத்தும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
தாய்ப்பால் நன்றாக சுரக்க பயிற்சிகள் என்ன?
தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டும் என்றால், முதலில் மனரீதியாக ஒரு தாய் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். பயிற்சிகளானது ஒரு தாய் தான் கருவுற்றிருக்கும் 4 அல்லது 5ஆவது மாதத்திலிருந்தே தொடங்க வேண்டும். பெரும்பாலான மகப்பேறு மருத்துவமனைகளில் இது தொடர்பான பல வழிகாட்டுதல்களை மருத்துவர்களே தருகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பேறு காலத்தில் இந்த 3 விஷயங்களை தாய்மார்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். தங்களை மனரீதியாக தயார்படுத்துதல், பாலூட்டும் முறை குறித்து மருத்துவர்கள் கூற பின்பற்றுதல், உணவு பழக்கம் ஆகியவை உங்களை தயார்படுத்தும் பயிற்சிகளாகும்.
‘ஜங்க ஃபுட்’:
பேறு காலத்திற்கு முன்னும் பேறு காலத்திற்கு பின்னும் ‘ஜங்க்’ உணவுகளை தவிர்ப்பது பால் சுரப்பிற்கு நல்லது. ஜங்க் உணவுகளில் இருக்கும் களோரிகளால் வரக்கூடிய பிரச்சனைகள் ஏராளம். தனது கர்ப்ப காலத்தில் ஒரு தாய் அடிக்கடி ஜங்க் உணவுகளை எடுத்துக்கொண்டால் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக ஜங்க் உணவுகளால் ஊட்டச்சத்து குறையும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் ஜங்க் உணவை உட்கொண்டால் அது ஊட்டச்சத்தை குறைத்து தாய்ப்பால் சுரப்பையும் குறைத்துவிடும். உங்களுக்கு உடல் பருமன் ஏற்படும் அபாயமும் உண்டு. எனவே, பேறு காலத்தில் ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது தாய்க்கும் சேய்க்கும் நலம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breastfeeding, Breastfeeding Diet, Child Care, Healthy Lifestyle, World breastfeeding week