ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

போலியான் ஆலிவ் எண்ணெய்யை கண்டறிவது எப்படி..? கலப்படத்தை அறிய டிப்ஸ்..!

போலியான் ஆலிவ் எண்ணெய்யை கண்டறிவது எப்படி..? கலப்படத்தை அறிய டிப்ஸ்..!

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

கடைகளில் விற்பனையாகும் ஆலிவ் ஆயில் உண்மையிலேயே குறைவான தரத்தில் இருக்கும் சோயாபீன் எண்ணெயுடன் கலக்கப்பட்டு எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் ஆக விற்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இதயத்துக்கு நல்லது, குறைவான கொழுப்பு கொண்டது, ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது என்று பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கொண்டது என்று ஆலிவ் ஆயில் வெளிநாடுகளில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் கூட பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் அழகுக்காகவும் ஆலிவ் எண்ணை பயன்பாட்டில் இருக்கின்றது. இருப்பினும், சந்தையில் கிடைக்கும் இட்டாலியன் ஆலிவ் எண்ணெயில் கிட்டத்தட்ட 80% போலியானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் பயன்படுத்த வேண்டும் என்று விளம்பரங்களில் ஹைலைட்ஸ் செய்து காட்டப்படும். நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, சூப்பர் மார்க்கெட்களில், கடைகளில் கிடைக்கும் ஆலிவ் எண்ணெயில் பெரும்பாலானவை இத்தாலிய ஆலிவ் எண்ணையும் கிடையாது, எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தையில் போலியான பொருட்கள் விற்பனை ஆகிறது என்பது பரவலாக காணப்படும். ஆனால், ஆலிவ் எண்ணையைப் பொறுத்தவரை, போலி எண்ணெய் என்பது நச்சுத்தன்மை நிறைந்தது, உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

ஹெல்த்லைன் கூறியுள்ளது படி, ஆலிவ் எண்ணையில் 14% சாச்சுரேட்டட் கொழுப்பு, 11% ஒமேகா 6 மற்றும் 3 உள்ளிட்ட அன்-சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இதில் ஓளிக் அமிலம் என்ற மோனோ அன்-ஸாச்சுரேட்டட் கொழுப்பும் உள்ளது. கேன்சர் உருவாக்கும் மரபணுக்களை எதிர்த்துப் போராடுகிறது, வைட்டமின் சத்துக்கள் ஆக்சிடேஷன் ஆகாமல் தடுத்து, உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது.

கலப்பட ஆலிவ் ஆயில் விற்பனை

மருத்துவ ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கடைகளில் விற்பனையாகும் ஆலிவ் ஆயில் உண்மையிலேயே குறைவான தரத்தில் இருக்கும் சோயாபீன் எண்ணெயுடன் கலக்கப்பட்டு எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் ஆக விற்கப்படுகிறது. பல நேரங்களில் சோயாபீன் எண்ணெய் தவிர்த்து, சில அமிலங்கள், செயற்கையான சுவை, ரசாயனங்கள் மற்றும் செயற்கையான மலிவு விலையில் இருக்கும் நறுமணப் பொருட்கள் ஆகியவையும் சேர்க்கப்படுகின்றன. அதாவது, ஒரிஜினல் ஆலிவ் எண்ணெய் போன்ற மணமும் தோற்றமும் வருவதற்கு பல விதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், பெரும்பாலான ஆலிவ் ஆயில் பேக்குகள் அல்லது பாட்டில்களை பார்க்கும் பொழுது அதில் இத்தாலியில் தயாரானது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் உண்மையிலேயே இதில் ஆலிவ் எண்ணை சிரியா, மொராக்கோ, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்துதான் சந்தைப்படுத்தப்படுகிறது. இதில் பெரும்பாலானவை இத்தாலியின் ஒரிஜினல் ஆலிவ் ஆயில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பலவிதமான உணவுப் பொருட்களை போலவே ஆலிவ் எண்ணெய்க்கும் காலாவதியாகும் தேதி இருக்கின்றது. எனவே எவ்வளவுதான் ரசாயனங்கள், மலிவான நறுமணமூட்டிகள், ஆலிவ் எண்ணெய் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கெட்டு விடும். அதுமட்டும் இல்லாமல் வெளிச்சம் காற்று ஈரப்பதம் ஆகியவையும் ஆலிவ் எண்ணையின் தன்மையை பாதித்து கெட்டுப் போகச் செய்யும். எனவே போலியான எண்ணெய் பயன்படுத்துவது உடலுக்கு மிகவும் ஆபத்தானது. போலியான எண்ணெயைப் பயன்படுத்தினால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

போலியான ஆலிவ் எண்ணையை பயன்படுத்தினால் ஏற்படும் டாக்சிக் ஆயில் சிண்ட்ரோம்

ஒரு சில உணவுப் பொருட்கள், பெரிய அளவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கானவர்களை பாதித்து இருக்கிறது. அத்தகைய ஆபத்தில் டாக்ஸிக் ஆயில் சிண்ட்ரோம் என்பதும் அடங்கும். 1981 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில், கிரேப்சீட் எண்ணெயில் ஒரு சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, நாடு முழுவதும் ஆலிவ் எண்ணெய்யாக, சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்டது.

இந்த எண்ணெய் வாங்கி பயன்படுத்திவர்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளானார்கள். இதில் கல்லீரல் பாதிப்பு கேன்சர் கிட்னி செயலிழப்பு ஆகியவையும் அடங்கும்.

Also Read : ஆலிவ் எண்ணெயில் இத்தனை நன்மைகளா ? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..

நீண்ட காலம் போலியான எண்ணெய் பயன்படுத்தினால், சர்க்கரை அளவு குறைந்துவிடும். இதனால், ஹைபோ கிளைகேமியா, அதிகப்படியான வியர்வை, பலவீனம், படபடப்பு என்று பல விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதிகப்படியான ரசாயனங்கள், ஆகியவை கல்லீரல் மட்டுமல்லாமல், பித்தப்பையை தீவிரமாக பாதிக்கும். குறைந்த பட்சமாக, செரிமானக் கோளாறு, செரிமானத்தில் பிரச்சனை, செரிமானம் சம்மந்தப்பட்ட நோய்கள் ஆகியவற்றை உண்டாக்கும்.

எது போலி எது அசல் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது?

போலியான ஆலிவ் எண்ணெய் எப்போதுமே கொஞ்சம் மெழுகு போல, டல்லாக, இருக்கும். அசல் எண்ணெய்யில் பாலிஃபெனால்ஸ் அதிகமாக இருப்பதால், ஃபிரெஷ்ஷாக, லேசான மிளகு சுவையுடன் இருக்கும்.
எந்த ஊரில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தாலும், ஆலிவ் எண்ணையின் பேக்கேஜில் அறுவடை தேதி இருப்பதை கவனிக்க வேண்டும்.
விலை மலிவாக இருக்கிறது என்று கவர்ச்சிகரமான லேபிள்களுடன் விற்பனையாகும் எண்ணைக்கு மயங்க வேண்டாம். லேபிள்களை கவனமாக படிக்கவும். லேபிளில் உள்ள தேதியில், அறுவடை தேதி அதிகபட்சம் 14 மாதங்களுக்குள் இருந்தால், அது ஃபிரெஷ்ஷானது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல எந்த இடத்தில் பெறப்பட்டது, என்று முழு விவரங்கள் இருப்பது அசல் எண்ணெய் என்பதை உறுதி செய்யும்.
வெளிர் நிற பாட்டில்களில் வருவதை வாங்க வேண்டாம். வெளிச்சம் படாமல் இருந்தால் தான் எண்ணெய் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.
First published:

Tags: Health tips, Olive oil