• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குறைந்த கலோரியில் நிறைந்த சக்தி பெற இந்த பொங்கல் செய்து சாப்பிடுங்கள்...

குறைந்த கலோரியில் நிறைந்த சக்தி பெற இந்த பொங்கல் செய்து சாப்பிடுங்கள்...

ரவைப் பொங்கல்

ரவைப் பொங்கல்

பொங்கல் பண்டிகையின் போது பால், புது அரிசியைக் கொண்டு பொங்கல் பொங்கப்படுகிறது.இது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று ஆகும்.

  • Share this:
பொங்கல் என்பது தென்னிந்தியாவில் உண்ணப்படும் அரிசி கொண்டு செய்யப்படும் உணவு வகையாகும். பொங்கல் உணவு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மிளகு பொங்கல் என வகைப்படும். மிளகு பொங்கல் காலை உணவாகவும் சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும் உண்ணப்படுகிறது. வெண் பொங்கல், பொங்கல் பண்டிகையின் போது பால், புது அரிசியைக் கொண்டு பொங்கல் பொங்கப்படுகிறது.இது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று ஆகும். இதில் பல்வேறு சத்துகள் அடங்கும். அந்த வகையில் இன்று ரவைப் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

ரவை - 1 ஆழாக்கு

கடுகு - அரை ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

பயற்றம் பருப்பு - கால் ஆழாக்கு

இஞ்சி - 1 சிறிய துண்டு

முந்திரிப் பருப்பு - 6 உடைத்தது

மிளகு - அரை ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 1

காய்ந்த மிளகாய் - 1

நெய் - ஒன்றரைக் கரண்டி



செய்முறை:

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கிள்ளிய பச்சை மிளகாய் உடன் காய்ந்த மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை போட்டு வதக்கியவுடன்  ரவையை போட்டு சிவக்க வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி, முந்திரிப் பருப்பு, மிளகு, சீரகம் என எல்லாவற்றையும் வறுத்து இரண்டரை ஆழாக்கு நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

மேலும் படிக்க.. சர்க்கரை நோயாளிகளுக்கான சூப்பர் டிபன்... மிஸ் பண்ணிடாதீங்க...

பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து வறுத்த ரவையை ஒரு கையால் சிறிது, சிறிதாக போட்டுக் கொண்டே மறுகையால் விடாது கிண்டிக் கொண்டே இருக்கவும். பின்னர் நெய் சேர்த்து கரண்டிக் காம்பால் கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைத்துப் பரிமாறவும். இதோ இப்போது சூடான ரவைப் பொங்கல் தயார். இதனை காரச் சட்டினியுடன் பரிமாற சூப்பராக இருக்கும்.

மேலும் படிக்க... நலம் பயக்கும் அவல் உப்புமா செய்வது எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: