• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Diwali Snacks: ரவா லட்டு பத்து நாள் ஆனாலும் டேஸ்ட் மாறமல் இருக்க இதை செய்யுங்கள்...

Diwali Snacks: ரவா லட்டு பத்து நாள் ஆனாலும் டேஸ்ட் மாறமல் இருக்க இதை செய்யுங்கள்...

ரவா லட்டு

ரவா லட்டு

பொதுவாக ரவா லட்டு செய்பவர்கள் செய்யும் முறையை விட இந்த முறையில் நாம் செய்வதால் நீண்ட நாட்களுக்கு ரவா லட்டு மிகுந்த தரத்துடன் முதல் நாள் செய்த அதே சுவையுடன் அப்படியே இருக்கும்.

  • Share this:
தீபாவளி இனிப்பு பலகாரங்களில் ரவா லட்டு எப்போதுமே இலாம் இருக்காது. மேலும் ரவா லட்டு செய்வது ரொம்ப ரொம்ப சுலபம் என்பதால் சிறு குழந்தைகள் கூட எளிதாக செய்து விடுவார்கள். ஆனால் முறையாக இப்படி ரவா லட்டு செய்து பாருங்கள், எவ்வளவு நாட்கள் ஆனாலும் அதன் குணம் மாறாது அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். சூப்பரான முறையில் ரவா லட்டு செய்வது எப்படி? வாங்க  தெரிந்து கொள்ளலாம்....

 தேவையான பொருட்கள்:

வறுத்த ரவை – ஒரு கப்

சர்க்கரை – முக்கால் கப்

தேங்காய் துருவல் – கால் கப்

ஏலக்காய்த் தூள் – கால் டீஸ்பூன்

காய்ச்சி ஆறின பால் – அரை கப்

நெய் – 3 டேபிள் ஸ்பூன்,

முந்திரிப் பருப்பு 10, பாதாம் பருப்பு – 5,

உலர் திராட்சை – 10

செய்முறை : ரவா லட்டு செய்ய முதலில் ரவையை நன்கு சூடு ஏற வறுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் ரவை லட்டு செய்யும் பொழுது திட்டு திட்டாக இல்லாமல் நைசாக சூப்பராக வரும். பின்னர் அதே மிக்ஸி ஜாரில் சர்க்கரையை சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை பாகு காய்ச்சி சேர்ப்பது எல்லாம் சரி வராது. இந்த முறையில் அரைத்து சேர்த்தால் சுவை கூடும்.

பிறகு முந்திரி, பாதாம் பருப்புகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய்களை தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேங்காயின் தோல் பகுதியை நீக்கி வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியை மட்டும் துருவலாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துருவிய தேங்காயை வெறும் வாணலியில் லேசாக 2 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை வறுத்து சேர்ப்பதால் சீக்கிரம் ரவா லட்டு கெட்டுப் போகாது, சுவையும் அற்புதமாக இருக்கும்.

மேலும் படிக்க... தீபாவளி ஸ்பேஷல்: தேங்காய் பர்பி செய்ய ரெசிபி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: