• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சாம்பார் வடை சாப்பிட்டு இருப்பீங்க... ரசம் வடை சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ ரெசிபி

சாம்பார் வடை சாப்பிட்டு இருப்பீங்க... ரசம் வடை சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ ரெசிபி

நாம் அனைவரும் பொதுவாக சாம்பார் வடையை செய்து சாப்பிட்டு இருக்கோம். ஆனால் ரசம் வடையை செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? வாங்க எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்...

  • Share this:
பருப்பு வடை சேர்த்து செய்யும் ரச வடை செய்முறையை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... 

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – 3/4 கப்

வெங்காயம் – 1

சிவப்பு மிளகாய் – 3

சீரகம் – 3/4 தேக்கரண்டி

கருவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லி இலை – 3 மேஜைக்கரண்டி

பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

ரசம் செய்ய தேவையான பொருட்கள்

புளி – 1 தேக்கரண்டி

தக்காளி – 1

மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

கொத்தமல்லி இலை, வெட்டப்பட்டது – 2 மேஜைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

ரசம் தூள்

சிவப்பு மிளகாய் – 3

கொத்தமல்லி / தனியா – 1 டீஸ்பூன்

கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் – 2 தேக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் – 1

கறிவேப்பிலை – சில



செய்முறை

முதலில் கடலைப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
மிக்சியில், சிகப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு மற்றும் சீரகத்தை பொடித்துக்கொள்ளவும். கடலைப் பருப்பிலிருந்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, மிக்சியில் சேர்க்கவும். தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம் , கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் அரைத்த பருப்புக் கலவையையும் சேர்த்து கலக்கவும். அப்புறம் இதை சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயயை காயவைத்து, உருட்டிய உருண்டைகளை, லேசாக தட்டி எண்ணெய்யில் 3-4 உருண்டை வரை போடவும்.பின்னர் மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.

ரசத்திற்கு தேவையான புளியை வெந்நீரில் ஊற வைக்கவும்.
ஒரு கப் தண்ணீரில் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
மிளகாய், மிளகு, சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை மிக்சியில் பொடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், புளி கரைசலை, 3 கப் தண்ணீர், மஞ்சள், உப்பு, தக்காளி, பெருங்காயம், ரசப்பொடி மற்றும் சில கருவேப்பிலை சேர்த்து, கலந்துகொள்ளவும்.

அடுப்பில் வைத்து, ரசம் கொதிவந்தவுடன், வடைடைகளை சேர்த்து, உடனடியாக அடுப்பை அணைத்து, மூடி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடுசெய்து, கடுகு, சிவப்பு மிளகாய், சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் கொத்தமல்லி இலை சேர்க்கவும். 15 நிமிடங்கள் குறைந்தபட்சம் ஊறியபின் பரிமாறவும்.

குறிப்பு

1. வடை வேக வைக்கும் பொழுது, தீயை மிதமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.

2. ரசம் அல்லது வடை, இரண்டில் ஏதாவது ஒன்றுதான்  சூடாக இருக்க வேண்டும். இரண்டுமே சூடாக இருந்தால் வடை கரைந்துவிடும்.

மேலும் படிக்க... திருக்கார்த்திகைக்கு சொஜ்ஜி அப்பம் செய்து பாருங்களேன்!

திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை செய்வது எப்படி?

திருக்கார்த்திகைக்கு நெய் அப்பம் செய்ய ரெசிபி!      

திருக்கார்த்திகைக்கு கடலை உருண்டை செய்யலாம்... 

சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த அரவணப் பாயாசம்

உளுந்து களி.. காலை உணவுக்கு சிறந்தது...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: