Home /News /lifestyle /

கல்யாண வீட்டு ரசம் ரகசியம் இதுதான்.. இனி வீட்டில் ரசம் வைக்கும் போது இந்த தவறை செய்யாதீர்கள்!

கல்யாண வீட்டு ரசம் ரகசியம் இதுதான்.. இனி வீட்டில் ரசம் வைக்கும் போது இந்த தவறை செய்யாதீர்கள்!

ரசம் ரெசிபி

ரசம் ரெசிபி

மற்ற உணவுகளை சாப்பிட்ட பின்பு கடைசியாக ரசத்தை சாப்பிட்டால் ஜீரணம் ஆகிவிடும்

    உணவும் மருத்துவமும் சேர்ந்த ஒரே உணவு ரசம் தான். மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம், களி ரசம் என ஏகப்பட்ட வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். குழந்தைகளுக்கு சளி பிடித்தால் உடனே ரசம் தான், குளிர் காலம் வந்தாலும் அப்பவும் ரசம் தான். வெறும் சைவம் மட்டுமில்லை நண்டு ரசம், மட்டன் ரசம், எலும்பு ரசம் என அசைவத்திலும் ரசம் வைத்து உண்பது உடலுக்கு ஆரோக்கியமான ஒன்று. ரசம் வைப்பது மிகவும் ஈஸி என்றாலும் பதத்திற்கு ஏற்றவாறு, சேர்க்கும் பொருட்களை பொறுத்தும் அதன் சுவை மாறுபடும்.

    பழைய சாதத்தை வைத்து சாஃப்டான சப்பாத்தி… இதையும் ஒருமுறை ட்ரை பண்ணுங்க!

    கொதிக்க வைக்காத ரசம் ஒரு சுவை என்றால், கொதித்த பின்பு தாளிக்கப்படும் ரசம் வேற சுவை. அதில் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் ஆண்கள் கேட்பது ஹோட்டல் ரசம் தான். ஹோட்டல் ரசமும் கல்யாண வீட்டில் பரிமாறப்படும் ரசமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். காரணம், மற்ற உணவுகளை சாப்பிட்ட பின்பு கடைசியாக ரசத்தை சாப்பிட்டால் ஜீரணம் ஆகிவிடும்.

    ஹோட்டல் ரசத்தில் வரும் அந்த வாசனையே ஆளை இழுத்து சாப்பிட தூண்டும். பசியே எடுக்காதவர்கள் கூட ஹோட்டல் ரசத்தை ஒரு டம்ளர் குடித்தால் போதும், 20 நிமிடத்தில் ஜீரணம் ஆகி சாப்பிட தொடங்கிவிடுவார்கள். அந்த ரசத்தைதை எப்படி வைப்பது, அதில் இருக்கும் ரகசியம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி பிரபல குக்கிங் யூடியூப் சேனலான டுடேஸ் சமையல் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

    தேவையான பொருட்கள் :

    மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, புளி தண்ணீர், உப்பு, கடுகு, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய்.

    செய்முறை:

    1,. முதலில் மிளகு மற்றும் சீரகத்தை தனியாக இடித்துக் கொள்ள வேண்டும்.

    2. பின்பு பூண்டு, பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும்.

    3. புளி தண்ணீருடன் தக்காளியை பிசைந்து கொள்ள வேண்டும்.

    4. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அதில் இடித்து வைத்துள்ள பூண்டு. மிளகு, சீரகம் சேர்த்து, அதில் பெருங்காயத்துள் சேர்க்க வேண்டும் .



    5. பின்பு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அதில் புளி கரைசலை சேர்த்து கொத்தமல்லியை தூவி விட வேண்டும்.

    6. ரசம் கொதிப்பதற்கு முன்பே அந்த வாசனையுடன் இறக்கினால் சுவையான ஹோட்டல் ரசம் அல்லது கல்யாண வீட்டு ரசம் தயார்.

    வழக்கமாக நம் வீடுகளில் ரசம் வைக்கும் போது மிளகு சீரகத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைப்பார்கள். ஆனால் கல்யாண வீட்டு ரசத்தி; அந்த பச்சை மிளகாயை பூண்டுடன் சேர்த்து இடிப்பது தான் அந்த மொத்த வாசனைக்கும் காரணம். இனிமே நீங்களும் ரசம் வைக்கும் போது இந்த தவறை செய்யாதீர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Cooking tips, Food, Food recipes

    அடுத்த செய்தி