உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ரசம் வகைகள்.. இதோ ரெசிபி!

மொடக்கத்தான்‌ ரசம்‌

உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய 5 வகையான ரசம்

  • Share this:
1. திப்பிலி ரசம்‌

தேவையானவை: புளி - சிறிய அளவு

உப்பு - ஒரு டீஸ்பூன்‌

பெருங்காயத்தூள்‌ - கால்‌ டீஸ்பூன்‌

ரசப்பொடிக்கு:

திப்பிலி குச்சி - 4 துண்டுகள்‌

காய்ந்த மிளகாய்‌ - 4

மிளகு - ஒரு டீஸ்பூன்‌

துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்‌

சீரகம்‌ - அரை டீஸ்பூன்‌.

தாளிக்க: நெய்‌ - கால்‌ டீஸ்பூன்‌,

கடுகு - கால்‌ டீஸ்பூன்‌, கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை: பொடிக்கு தேவையானவற்றை கால்‌ டீஸ்பூன்‌ நெய்விட்டு, வறுத்து பொடித்துக்‌ கொள்ளவும்‌. புளியை 2 கப்‌ நீர்‌ விட்டு கரைத்துக்‌ கொள்ளவும்‌. உப்பு, பெருங்காயம்‌ சேர்த்து கொதிக்க வைக்கவும்‌. பிறகு பொடியைப்‌ போட்டு, நெய்யில்‌ கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்‌. . திப்பிலி ரசம் ரெடி. இந்த திப்பிலி குச்சி நாட்டு மருந்து கடைகளில்‌ கிடைக்கும்‌.

2. முருங்கை ஈர்க்கு ரசம்‌

தேவையானவை:

தக்காளி - 1,

புளி - கொட்டைப்பாக்கு அளவு,

முருங்கைக்‌ குச்சி (சற்று நீளமானதாக) - 10

உப்பு - ஒரு டீஸ்பூன்‌

துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்‌

மஞ்சள்தூள்‌ - கால்‌ டீஸ்பூன்‌

பெருங்காயத்தூள்‌ - கால்‌ டீஸ்பூன்‌.

ரசப்பொடிக்கு:

துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்‌,

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்‌

மிளகு - ஒரு டீஸ்பூன்‌

தேங்காய்‌ துருவல்‌ - ஒரு டீஸ்பூன்‌

சீரகம்‌- அரை டீஸ்பூன்‌,

காய்ந்த மிளகாய்‌ - 3,

கறிவேப்பிலை - ஒரு கொத்து,

எண்ணெய்‌ - கால்‌ டீஸ்பூன்‌.

தாளிக்க: எண்ணெய்‌, கடுகு, கறிவேப்பிலை,

செய்முறை: எண்ணெய்‌ விட்டு தேங்காய்‌ துருவல்‌, கறிவேப்பிலை தவிர மற்ற எல்லாவற்றையும்‌ வறுத்துக்‌ கொள்ளவும்‌. அடுப்பை அணைத்த பிறகு, தேங்காய்‌ துருவல்‌, கறிவேப்பிலை இரண்டையும்‌ போட்டு சூடு ஆறியதும்‌ பொடித்துக்‌ கொள்ளவும்‌. துவரம்பருப்பை மஞ்சள்தூள்‌ சேர்த்து வேக வைத்து எடுத்துக்‌ கொள்ளவும்‌. புளியை 2 கப்‌ நீர்‌ விட்டு கரைத்து வடிகட்டி வைக்கவும்‌. முருங்கைக்‌ குச்சிகளை அதில்‌ போட்டு உப்பு, பெருங்காயம்‌

சேர்த்து வேக விடவும்‌. தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும்‌. ரசப்பொடியைப்‌ போட்டு, ரசம்‌ கொதித்தவுடன்‌ வேக வைத்த பருப்பை ஊற்றி, எண்ணெயில்‌ கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டினால் முருங்கைக்காய் ரசம் ரெடி.

3. தேங்காய்ப்பால்‌ ரசம்‌

தேவையானவை:

தக்காளி - 1,

உப்பு - முக்கால்‌ டீஸ்பூன்‌,

தேங்காய்‌ - 1,

பச்சை மிளகாய்‌ - 3,

கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது,

எலுமிச்சம்பழச்‌ சாறு - ஒரு டீஸ்பூன்‌

சீரகம்‌ - கால்‌ டீஸ்பூன்‌ தேங்காய்‌ எண்ணெய்‌ - கால்‌ டீஸ்பூன்‌

செய்முறை: தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்‌ கொள்ளவும்‌. தேங்காயை துருவி 2 முறை பால்‌ எடுத்துக்‌ கொள்ளவும்‌. பச்சை மிளகாயை உப்பு, சீரகம்‌ சேர்த்து அரைத்துக்‌ கொள்ளவும்‌. நீர்த்த பாலில்‌ தக்காளியைப்‌ போட்டு ஒரு கொதி வந்ததும்‌, அரைத்த மிளகாயை அதில்‌ சேர்க்கவும்‌. கொத்துமல்லி, கறிவேப்பிலை இலைகளையும்‌ போடவும்‌. கடைசியாக கெட்டியான முதல்‌ பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும்‌ இறக்கி, தேங்காய்‌ எண்ணெயை ஊற்றவும்‌. பிறகு எலுமிச்சம்பழச்‌ சாறை விடவும்‌. தோசைக்கும்கூட இதைத்‌ தொட்டுக்‌ கொள்ளலாம்‌.

4. அரைத்துவிட்ட பைனாப்பிள்‌ ரசம்‌

தேவையானவை: பழுத்த தக்காளி - 1

அன்னாசிப்பழ துண்டுகள்‌ - கால்‌ கப்‌

புளி - சிறிது அளவு

உப்பு - ஒரு டீஸ்பூன்‌

துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்‌

மஞ்சள்தூள்‌ - கால்‌ டீஸ்பூன்‌

தேங்காய்ப்பால்‌ - ஒரு டீஸ்பூன்‌

பெருங்காயம்‌ - கால்‌ டீஸ்பூன்‌

ரசப்பொடிக்கு:

தனியா - 2 டீஸ்பூன்‌,

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்‌,

மிளகு - ஒரு டீஸ்பூன்‌,

சீரகம்‌ - அரை டீஸ்பூன்‌,

காய்ந்த மிளகாய்‌ - 4,

எண்ணெய்‌ - கால்‌ டீஸ்பூன்‌.

தாளிக்க: எண்ணெய்‌, கடுகு, கொத்துமல்லி, கறிவேப்பிலை

செய்முறை: தனியா முதல்‌ மிளகாய்‌ வரை அனைத்தையும்‌ எண்ணெய்‌ விட்டு வறுத்து நன்றாக பொடித்து வைத்துக்‌ கொள்ளவும்‌. பருப்பை மஞ்சள்தூள்‌ சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக்‌ கொள்ளவும்‌. அன்னாசிப்பழத்‌ துண்டுகளை நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்து வைத்துக்‌ கொள்ளவும்‌. அதன்பின்னர் புளியை ஒரு கப்‌ நீரில்‌ கரைத்து வடிகட்டி வைத்துக்‌ கொள்ளவும்‌. தக்காளியை அரை கப்‌ நீர்‌ விட்டு பொடியாக நறுக்கி வேக வைக்கவும்‌. பிறகு புளித்‌ தண்ணீரை ஊற்றி உப்புப்‌ போடவும்‌. சிறிது கொதிக்க ஆரம்பித்தவுடன்‌ பொடியைப்‌ போட்டு வெந்த பருப்பையும்‌ போட்டு, பெருங்காயத்தூளையும்‌ போடவும்‌. பொங்கி வரும்‌ சமயத்தில்‌ அன்னாசிச்‌ சாற்றை ரசத்தில்‌ ஊற்றி இறக்கவும்‌. எண்ணெய்‌ ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, தாளிக்கவும்‌. கடைசியாக தேங்காய்ப்பால்‌ ஊற்றி இறக்கவும்.

5. மொடக்கத்தான்‌ ரசம்‌

தேவையானவை:

புளி - எலுமிச்சம்பழ அளவு,

உப்பு - ஒரு டீஸ்பூன்‌

மொடக்கத்தான்‌ கீரை -கால்‌ கப்‌.

ரசப்பொடிக்கு: மிளகு - ஒரு டீஸ்பூன்‌,

சீரகம்‌ - அரை டீஸ்பூன்‌,

துவரம்பருப்பு - ஒரு

டீஸ்பூன்‌,

பெருங்காயம்‌ - ஒரு சிறிய துண்டு,

காய்ந்த மிளகாய்‌ - 3,

எண்ணெய்‌ - கால்‌ டீஸ்பூன்‌.

தாளிக்க: நெய்‌ கடுகு, கறிவேப்பிலை

செய்முறை: ரசப்பொடிக்குத்‌ தேவையான பொருட்களை கால்‌ டீஸ்பூன்‌ எண்ணெய்‌ விட்டு வறுத்து பொடித்துக்‌ கொள்ளவும்‌. மொடக்கத்தான்‌ கீரையை பொடியாக நறுக்கவும்‌. புளியை 2 கப்‌ நீர்‌ ஊற்றி கரைத்து, வடிகட்டி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்‌. பிறகு ரசப்பொடியையும்‌ போடவும்‌. இன்னொரு கடாயில்‌ நெய்யில்‌ கடுகு தாளித்து அதில்‌ மொடக்கத்தான்‌ கீரையை வதக்கி ரசத்தில்‌ போட்டு இறக்கவும்‌. இது சிறிது கசப்பாக இருக்கும்‌. ஆனால்‌ வாயுத்‌ தொந்தரவுக்கு மிகவும்‌ நல்லது.
Published by:Vaijayanthi S
First published: