நோன்பு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள் என்னென்ன?

நோன்பு காலத்தில் சமநிலையான உணவு முறையை கடைபிடிக்க சில டிப்ஸ்.

நோன்பு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள் என்னென்ன?
ரமலான் நோன்பு- பேரிச்சை பழம்
  • News18
  • Last Updated: May 8, 2019, 10:11 AM IST
  • Share this:
தமிழகத்தில் ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் 3-வது கடமையாக ரமலான் நோன்பு திகழ்கிறது. சூரியன் தோன்றுவதற்கு முன் உணவருந்தி, மாலை வரை ஒருதுளி நீரைக்கூட பருகாமல் 30 நாட்கள் விரதம் இருப்பதே ரமலான் நோன்பின் சிறப்பு.

புனித மாதமான ரமலான் மாதத்தில் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் அதனை மாலையில் முடிக்கும் போது, பேரிச்சை பழத்தை உண்டு முடிப்பது வழக்கம். அவர்கள் இந்த நோன்பு காலத்தில் சமநிலையான உணவு முறையை கடை பிடிக்க சில டிப்ஸ்.

நீர்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும்: ரமலான் நோன்பு இருப்பவர்கள் தினமும் நோன்பு முடிந்தவுடன் பழங்கள் அல்லது காய்கறிகள் நிறைந்த ஜூஸ்-ஐ அருந்த வேண்டும். அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சர்க்கரை கலக்காத தயிரை உண்பது நல்லது. அது உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமநிலையாக வைத்துக்கொள்ள உதவும்.


கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் சேர்க்கவும்: நோன்பு தொடங்குவதற்கு முன் அதிகாலை உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை உட்க்கொள்ள வேண்டும். கோதுமை ரொட்டி, ஓட்ஸ், தானிய வகைகள், கஞ்சி ஆகிவற்றை சேர்த்துக்கொள்ளலாம். மேலும் உப்பு இல்லாத சீஸ், முட்டை மற்றும் பால் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உண்பது நல்லது.

மேலும், பதப்படுத்தப்பட்ட ஜுஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக காய்கறிகள் நிறைந்த வெஜிடெபிள் சாலட் உண்பது நல்லது.

சூப்பர் ஃபுட்: பேரிச்சை பழம் எனப்படும் சூப்பர் ஃபுட்- ஐ தினமும் மாலை நோன்பு முடிக்கும் போது உட்கொள்வது நல்லது. இந்த சூப்பர்ஃபுட் உங்கள் உடலுக்கு ஃபைபர், சர்க்கரை மற்றும் மெக்னீசியம் ஆகிவற்றை தேவையான அளவு அளிக்கக்கூடியது. அத்துடன் ஆலிவ் மற்றும் வாழைப்பழங்களை சேர்த்துகொள்வது நல்லது. அவை ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை கடைபிடிக்க உதவும்.சர்கரை மற்றும் எண்ணெய் உணவை சேர்க்கவும்:
நோன்பு காலங்களில் சர்க்கரை மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் சிறிதளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ரமலானில் ஒரு சமநிலையான உணவு முறையைப் பின்பற்ற வறுத்த உணவுகள் அல்லது அதிகப்படியான இனிப்பு உணவுகளை சேர்த்துக்கொள்ள கூடாது. சிறிதளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

நோன்பு காலத்தில் உங்களது உடலின் ஆற்றலை சமநிலையாக பராமரிக்க இந்த உணவு முறைகளைப் பின் பற்றினாலே போதுமானது.
First published: May 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading