ரமலான் 2019: இஃப்தார்க்கு இந்த ஹோட்டல்கள் எல்லாம் பெஸ்ட்!

ரமலானுக்கு டெல்லி ஜம்மா மஸ்ஜித் அருகே உள்ள 5 உணவகங்களில் உணவு உண்ண மறக்காதீர்கள்.

ரமலான் 2019: இஃப்தார்க்கு இந்த ஹோட்டல்கள் எல்லாம் பெஸ்ட்!
ரமலான் 2019: இஃப்தார்க்கு இந்த ஹோட்டல்கள் எல்லாம் பெஸ்ட்!
  • News18
  • Last Updated: May 10, 2019, 3:02 PM IST
  • Share this:
கடந்த மே 7-ம் தேதி ரமலான் 2019 தொடங்கியது. இந்த ரமலானுக்கு இஃப்தார் உணவு உண்ண பழைய டெல்லி அருகே உள்ள உணவங்களுக்கு சென்று உணவு உண்டு பாருங்கள். கண்டிப்பாக உணவு காதலர்களுக்கு இங்கு கிடைக்கும் உணவுகள் பிடிக்கும். இந்தப் பகுதியில் இருந்து வெளியேறும் நறுமணங்களால் அந்த உணவுகளை சுவைக்காமல் வர முடியாது.

இங்கு சூப்பர் ருசியான உணவு வகைகள் கிடைக்கும். மாக்டெய்ல்ஸ், சர்பத், தந்தூரி சிக்கன், ஃபல்லுடா மற்றும் பிரியாணி வகைகள் என சைவ, அசைவ உணவுகள் அனைத்தும் கிடைக்கும். இஃப்தாரின் போது இந்த மாதிரியான உணவுகள் முதன்மை பெறுகின்றன.

1.எஐ ஜவஹர் உணவகம்: இந்த உணவகம் பழைய டெல்லியில் நம்பர்: 8, ஜமா மஸ்ஜித் மத்திய மஹால் ரோடு, மத்தியா மஹால் என்ற இடத்தில் உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த உணவகத்தில்தான் விரும்பி உணவு உண்ணுவார். இங்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் கிடைக்கும். மத்திய உணவு மற்றும் டின்னர் இங்கு சாப்பிடலாம். இந்த உணவகத்தில் சிக்கன் வகைகள் மிகவும் பிரபமாவை. சிக்கனில் சிக்கன் ஜஹாங்கிரி, மட்டன் ஸ்டீல், முட்டை கறி ஆகியவை சுவையாக இருக்கும்.


2. ஸ்லாம் சிக்கன் கார்னர்: இந்த உணவகத்தில் சமைக்கப்படும் சிக்கனில் அதிகளவு அமுல் வெண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது மாதிரியான சிக்கன் இங்கு மட்டும்தான் கிடைக்கும். மேலும் இந்த உணவகத்தில் விதவிதமான கபாப்கள் கிடைக்கும். அதோடு கொடுக்கப்படும் க்ரேவியும் சாலட்-ம் சுவை மிகுந்ததாக இருக்கும். இந்த உணவகம் நம்பர் 540, பஜார் மத்திய மஹால், ஜமா மஸ்ஜித் என்ற இடத்தில் உள்ளது.
3. பால்வன் பிரியாணிவாலா: இந்த உணவகத்திற்கு பிரியாணி மிர்ச் மசால என்ற மற்றொரும் பெயர் உள்ளது. இது காரசாரமான பிரியாணிக்கு பிரமலமானது. ஆனால் இந்த பிரியாணி வகைகள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விற்று தீர்ந்துவிடும். இதன் உரிமையாளர்களான ஹாஜி மற்றும் அன்வர் தினமும் கடைக்கு மாலை 5 மணிக்கு வந்து காலை 2 மணிக்குதான் செல்வார்கள். இந்த உணவகம் நம்பர்; 701, ஹவேலி ஆசாம் கான், சித்லி கபர், ஜமா மஸ்ஜித் என்ற விலாசத்தில் உள்ளது.

4.நவாப் குரேஷியின் வாட்டர் மில்லான் ஷேக்: இங்கு பலவிதமான ஜூஸ்கள் மிகவும் சுவையாக கிடைக்கும் . அதிலும் சம்மர் சீசனுக்கு ஏற்ற மாதிரியான ஜுஸ்கள் இங்கு மட்டுமே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஜூஸ் அமுல் பால் மற்றும் வாட்டர்மிலான் மூலமாக தயாரிக்கப்படுகிறது. இந்த ஜூஸ் கடை நம்பர்: 1149, மியா மஹால், ஜமா மஸ்ஜித் அருகே உள்ளது.

5.கியானி டி ஹட்டி: ஐஸ் கிரீம் விரும்புபவர்கள் இந்த இடத்திற்கு செல்லாமல் இருக்க முடியாது. இந்த கடைக்கு கியானி குரூச்சரன் சிங் உரிமையாளர் ஆவார். இந்த உணவகத்தின் மெனுவில் ஐஸ் கிரீம் மட்டுமே இருக்கும். இங்கு கிடைக்கும் ரபரி ஃபல்லூடா மிகவும் பிரபலமானது. இந்த உணவகம் பழைய டெல்லியில், சர்ச் மிஷன் ரோடு, கரி பாவோலிக்கு அருகில் உள்ளது.


First published: May 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading