தீரன், என்.ஜி.கே போன்ற படங்களில் தன் நடிப்பின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நாயகி ரகுல் பிரீத்சிங். ஃபிட்னஸ் ஃபிரீக்கான ரகுலின் இன்ஸ்டாகிராம் முழுவதும் அவரின் உடற்பயிற்சி வீடியோக்களால் நிரம்பியிருக்கும்.
ஆனால் சமீப காலமாக ஊரடங்கில் வீட்டில் இருப்பதால் சமையல் விடியோக்கள், புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது வீட்டில் டார்க் சாக்லெட் கேக் செய்ததாக புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். அதை நீங்களும் வீட்டில் செய்து பார்க்க உங்களுக்காகவே அந்த ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள் :
டார்க் சாக்லெட் துண்டுகள் - 1 கப்
முட்டை - 3
மைதா - 2 கப்
வாழைப்பழம் - 2
ஆல்மண்ட் பட்டர் ( Almond butter) - 1/4 கப்
தேங்காய் சர்க்கரை (Coconut sugar) - 3 tbsp
கோகோ பவுடர் - 1/4 கப்
உப்பு - 1/2 tsp
பேக்கிங் பவுடர் - 1 tsp
செய்முறை :
பாத்திரத்தில் வாழைப்பழங்களை மைய நசுக்கி அதில் முட்டை, ஆல்மண்ட் பட்டர் மற்றும் தேங்காய் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக மற்ற மாவு மற்றும் பவுடர் என அனைத்து பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதையும் சீராகக் கலந்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக சாக்லெட் துண்டுகளையும் சேர்த்து கலக்குங்கள்.
பின் கேக் வைக்கப்போகும் கிண்ணத்தை சுற்றிலும் பட்டர் தடவிக்கொள்ளுங்கள். அப்போதுதான் கேக்கை வெந்ததும் வெளியே எடுக்க வசதியாக இருக்கும்.
ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டாலும் இவ்வளவு நன்மைகளா..?
தற்போது கலவையை அதில் மாற்றி அதன் மேலே முந்திரி, திராட்சை தூவுங்கள். சாக்லெட்டுகளையும் தூவலாம்.
தற்போது மைக்ரோஓவனில் வைத்து 40 நிமிடங்களுக்கு காத்திருங்கள். தற்போது எடுத்துப் பாருங்கள். கேக் நன்கு வெந்திருக்கும். சூடு தணிந்ததும் துண்டுகளாக நறுக்கி சுவைக்கலாம்.
அவ்வளவுதான் டார்க் சாக்லெட் கேக் தயார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.