ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி :  வீட்டிலேயே சுவையான அவல் நக்கெட்ஸ் செய்வது எப்படி..?

மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி :  வீட்டிலேயே சுவையான அவல் நக்கெட்ஸ் செய்வது எப்படி..?

அவல் நக்கெட்ஸ்

அவல் நக்கெட்ஸ்

நன்றாக மழை பெய்து கொண்டிருக்கும்போது சுட சுட டீயுடன் இந்த மொறு மொறு அவல் நக்கெட்ஸ் மிக அருமையான ஒரு காம்போவாக இருக்கும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மழைக்காலம் நெருங்கி வரும் வேளையில் வீட்டிலேயே பலவிதமான புதிய புதிய சுவையான தின்பண்டங்களையும் நொறுக்கு தீனிகளையும் செய்து உண்டு மகிழலாம்.

வெறும் அவல், உருளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய் பட்டாணி மற்றும் சிறிது மசாலா ஆகியவற்றை கொண்டே வீட்டிலேயே சுவையான அவல் நக்கெட்ஸ் செய்யலாம். அதிக அளவு எண்ணெய் சேர்க்காமல். வெறும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு மட்டுமே எண்ணெய் சேர்த்து செய்வதால் உடலுக்கு தீங்கு விளைவிக்காததாகவும் இருக்கும். மேலும் இதை இன்னும் மொறுமொறுப்பாக ஆக்குவதற்கு சிறிதளவு பிரட் துருவல்களை எடுத்துக்கொண்டு சோளமாவு சேர்த்து பொரிக்கலாம்.

நன்றாக மழை பெய்து கொண்டிருக்கும்போது சுட சுட டீயுடன் இந்த மொறு மொறு அவல் நக்கெட்ஸ் மிக அருமையான ஒரு காம்போவாக இருக்கும்.. சுவையை கூட்டுவதற்கு இந்த அவல் நக்கெட்ஸுடன் டொமேட்டோ சாஸ் சேர்த்து கொள்ளலாம்.

Read More : கேரட் தோலை வச்சு இத்தனை விஷயம் பண்ணலாமா..? இனி தோலை தூக்கிப் போடமாட்டீங்க..

அவல் நக்கெட்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

அவல் ஒரு கப்

1/2 வெங்காயம்

1/4 கப் அவித்த பட்டாணி

1/2 டேபிள் ஸ்பூன் சீரகப் பவுடர்

1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்

தேவையான அளவு உப்பு

2 டேபிள் ஸ்பூன் சோள மாவு

2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்

2 அவித்த உருளைக்கிழங்கு

1/2 குடைமிளகாய்

1/2 டேபிள்ஸ்பூன் நறுக்கப்பட்ட கொத்தமல்லி தழைகள்

1 டேபிள் ஸ்பூன் உலர் மாம்பழத்தூள்

1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா

2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு

4 டேபிள் ஸ்பூன் பிரட் துகள்கள்

செய்முறை:

அவலை நன்றாக கழுவ வேண்டும் : தேவையான அளவு அவல் எடுத்துக்கொண்டு தண்ணீரில் அலசி, ஒன்றில் இருந்து இரண்டு நிமிடம் வரை ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து விட்டு அதனை மற்றொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்குடன் சேர்த்து பிசைய வேண்டும் : அவித்த உருளைக்கிழங்கை நன்றாக பிசைந்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஏற்கனவே எடுத்த வைத்த அவலை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
காய்கறிகளை சேர்க்க வேண்டும் இப்போது நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பட்டாணி, கொத்தமல்லி, தழைகள் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக கலக்க வேண்டும்.
மசாலாக்களை சேர்க்க வேண்டும்: சீரகத்தூள் மற்றும் உலர் மாம்பழதூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை அந்தக் கலவையுடன் சேர்க்க வேண்டும். பிறகு மேலே கூறிய அளவு அரிசி மாவை சேர்த்து மாவாக வரும் வரையில் கைகளால் நன்றாக கலக்க வேண்டும்.
நக்கெட்ஸ் தயார் செய்ய வேண்டும்: பிறகு பெரிய உருண்டையாக உள்ள அந்த மாவில் இருந்து சிறிது சிறிதாக மாவை எடுத்து அவற்றை கைகளால் உருளை வடிவில் உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
மொறுமொறுப்புக்காக சோளமாவும் மற்றும் ப்ரெட் துகள்களையும் சேர்க்க வேண்டும்: ஒரு கிண்ணத்தில் சோள மாவு கலவையை எடுத்துக்கொண்டு அதனோடு கால் கப் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும்.ஏற்கனவே உருட்டி வைத்த மாவை அந்த சோள மாவு கலவையில் முக்கி எடுத்து, பிறகு பிரட் துகள்களில் முழுவதுமாக ஒட்டிக் கொள்ளுமாறு பிரட்டி எடுத்துக் கொண்டு அதனை தனியாக வைக்க வேண்டும்.
எண்ணெயில் பொறிக்க வேண்டும்: கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நாம் எடுத்து வைத்த சோளமாவு கலந்த அந்த நக்கெட்டை கடாயில் இட்டு ஷேலோ ஃப்ரை செய்ய வேண்டும். நக்கெட்ஸ் பொன்னிறத்தில் வந்ததும் அவற்றை எடுத்து விடலாம்.
நக்கெட்ஸ் பரிமாறத் தயார்: வீட்டிலேயே செய்த சுவையான அவல் நக்கெட்ஸ் தற்போது தயார்.. உங்களது தேவைக்கேற்ப மயோனிஸ், புதினா சட்னி, அல்லது கெட்சப் சேர்த்து உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பரிமாறலாம்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Evening Snacks, Food, Food recipes