ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மழைக்காலத்தில் சளி, இருமலை கட்டுப்படுத்தும் திப்பிலி ரசம் வச்சு சாப்பிடுங்க... ரெசிபி இதோ...

மழைக்காலத்தில் சளி, இருமலை கட்டுப்படுத்தும் திப்பிலி ரசம் வச்சு சாப்பிடுங்க... ரெசிபி இதோ...

மாதிரிப்படம் திப்பிலி ரசம்

மாதிரிப்படம் திப்பிலி ரசம்

திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக் குணமாக்கும். நோய்களைக் குணப்படுத்தும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  Thippili Rasam | மழைக்காலம் வந்துட்டாலே சளி,இருமல், காய்ச்சல் கூடவே வந்துடும். இது மாதிரி நேரத்துல சுலபமா வீட்டிலேயே கசாயம் செய்து சாப்பிட்டால் கூடுதல் நன்மை கிடைக்கும். அதுவும் அனைவருக்கும் ஏற்ற திப்பிலி ரசத்தை குழந்தைகளுக்கும் செய்து கொடுத்தால் நல்லது. அதனால் அவர்கள் சளி போன்ற தொல்லைகள் இல்லாமல் இருப்பார்கள்..

  திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக் குணமாக்கும். நோய்களைக் குணப்படுத்தும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அத்தகைய திப்பிலியில் ரசம் வைப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம்...

  தேவையான பொருட்கள் :

  அரிசி திப்பிலி - 10,

  கண்டதிப்பிலி - சிறிதளவு,

  மிளகு - 10,

  காய்ந்த மிளகாய் - ஒன்று,

  புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,

  சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்,

  கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,

  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

  உப்பு - தேவையான அளவு.

  கொத்தமல்லி - சிறிதளவு

  திப்பிலி

  செய்முறை:

  முதலில் புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பின்னர் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை கலந்து தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  Read More : குளிர் தாங்க முடியலயா..? உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும் உணவுகளின் லிஸ்ட்...

  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்க்கினால் திபிலி ரசம் ரெடி

  குறிப்பு: பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட... மிகவும் நன்றாக இருக்கும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Cold, Cough, Fever, Health