ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வெல்லம் போட்டு இனிப்பான கேழ்வரகு அடை செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி...

வெல்லம் போட்டு இனிப்பான கேழ்வரகு அடை செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி...

கேழ்வரகு அடை

கேழ்வரகு அடை

குழந்தைகளுக்கு அவ்வப்போது ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். பெரியவர்களுக்கும் நல்லது.. அதை இப்படி வெல்லம் சேர்த்து இனிப்பு சுவையில் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கேழ்வரகில் இரும்புச்சத்து நிறைவாக இருப்பதால் அதை குழந்தைகளுக்கு அவ்வப்போது ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். பெரியவர்களுக்கும் நல்லது.. அதை இப்படி வெல்லம் சேர்த்து இனிப்பு சுவையில் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1 கப்

வெல்லம் - 1/2 கப்

தேங்காய் துருவல் - 1/4 கப்

ஏலக்காய் - 1/4 ஸ்பூன்

நெய் - தே.அ

உப்பு - 1/4 சிட்டிகை

செய்முறை :

கடாயில் நெய் கொஞ்சம் விட்டு கேழ்வரகு மாவை சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும்.

பின் அதே கடாயில் வெல்லம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு உருக வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள்.

பின் வறுத்த கேழ்வரகு மாவில் வெல்லம் மற்றும் துருவிய தேங்காய், உப்பு , ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.

இப்போது கெட்டியான பதத்தில் மாவு தயார். இப்போது இதை தோசைக்கல்லில் நெய் விட்டு கல்லிலேயே ஒரு பிடி மாவை உருட்டி தட்டுங்கள்.

பின் இரு புறமும் திருப்பி எடுக்க கேழ்வரகு அடை தயார்.

First published:

Tags: Ragi, Sweet recipes