Home /News /lifestyle /

ராகியில் ஓட்டைவடை செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? ருசியானது மட்டுமல்ல ஆரோக்கியமானது...

ராகியில் ஓட்டைவடை செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? ருசியானது மட்டுமல்ல ஆரோக்கியமானது...

ராகியில் ஓட்டைவடை

ராகியில் ஓட்டைவடை

இதை மாலையில் குழந்தைகள் , பெரியவர்கள் என எவரும் சாப்பிடலாம். டீ குடிக்கும் நேரத்தில் மொறுமொறுவென கொறிக்கலாம்.

கேழ்வரகு இரும்பு சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. அதோடு நீண்ட நேரம் பசியும் எடுக்காது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். சரி இதில் ராகி ஓட்டைவடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ராகி மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 2 tbsp
எண்ணெய் - 1 tbsp
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தே.அ
தேவைப்பட்டால் கடலை பருப்பு - ஒரு கைப்பிடி



செய்முறை :

முதலில் பாத்திரத்தில் தண்ணீர் சூடாக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்த்து கலந்துவிடுங்கள்.

பின் சுடுதண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். மாவு நல்ல கெட்டியான பதத்தில் இருக்கக் கூடாது.

பிசைந்ததும் கடாயில் வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வையுங்கள்.

பப்பாளி காயில் அருமையான கூட்டு செய்யலாமா..? நீங்களும் டிரை பண்ணி பாருங்க...

காய்ந்ததும் மாவில் சிறிதளவு எடுத்து ஓட்டை கரண்டியின் பின் புறம் மாவை நன்கு மெலிதாக தட்டி பின் காய்ந்துள்ள எண்ணெயில் போடுங்கள்.

சிறிது நேரம் கழித்து மாவை திருப்பி இரு புறமும் வேக வையுங்கள். நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். இப்படி ஒவ்வொன்றாக செய்ய ராகி ஓட்டைவடை தயார்.

இதை மாலையில் குழந்தைகள் , பெரியவர்கள் என எவரும் சாப்பிடலாம். டீ குடிக்கும் நேரத்தில் மொறுமொறுவென கொறிக்கலாம்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Ragi, Snacks

அடுத்த செய்தி