முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஹெல்தி காலை உணவுக்கு ராகி தோசை தான் பெஸ்ட்… இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.!

ஹெல்தி காலை உணவுக்கு ராகி தோசை தான் பெஸ்ட்… இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.!

ragi dosa

ragi dosa

Ragi Dosa Recipe | ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் ராகி (கேழ்வரகு) தோசையைத் தேர்வு செய்யலாம். இது எலும்புகளை வலுப்படுத்தவும், நாள் முழுவதும் உடல் சோர்வடையாமல் இருப்பதற்கும் உதவியாக உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காலை உணவு என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் இன்றியமையாத ஒன்று. நாள் முழுவதும் நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பதற்கு காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் உதவியாக உள்ளது. ஆனால் இன்றைக்கு உள்ள சூழலில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தொடங்கி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் என பலரும் காலை உணவை ஸ்கிப் செய்து விடுகின்றனர்.

காலை உணவை தவிர்ப்பதனால் இவர்கள் காலை 11 மணிக்குள் சோர்வடைவார்கள். இதோடு செய்யும் வேலைகளில் அவர்களால் கவனம் செலுத்த முடியாது.. எனவே தான் காலை உணவை எந்தவொரு சூழலிலும் ஸ்கிப் செய்யாமல் சாப்பிட வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இருந்த போதும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கும் பலர் காலை உணவை சாப்பிட வேண்டாம் என்று நினைப்பது உண்டு. டயட்டில் இருப்பர்களும், ஆரோக்கியமாக உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் காலை உணவாக ராகி தோசையை நிச்சயம் தேர்வு செய்யலாம். கேப்பை, கேழ்வரகு என்றழைக்கப்படும் ராகி மாவில், கால்சியம், இரும்பு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இவை ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும், நீரழிவு நோயைக்கட்டுப்படுத்துவது, உடல் சோர்வைப்போக்குவதற்கு, உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்தவும் உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் கேழ்வரகில் உள்ளதால் காலை உணவாக நீங்கள் இதனை பயன்படுத்தலாம். வெறும் 5 நிமிடங்களில் சத்தான ராகி தோசையை எவ்வாறு செய்யலாம் என இங்கே தெரிந்துக்கொள்வோம்..

ராகி தோசை செய்யும் முறை:

தேவையானப் பொருட்கள்

ராகி மாவு – 300 கிராம்

மோர் – 200 மில்லி

பேக்கிங் சோடா, உப்பு – தேவைக்கு ஏற்ப

துருவிய சீஸ்

50 வயதிற்கு பின் பெண்கள் அக்கறை செலுத்த வேண்டிய உணவு பழக்கங்கள்...!

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு மோர் சேர்த்து மாவுடன் கலந்துக்கொள்ள வேண்டும். இதோடு தேவைக்கு ஏற்ப உப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும். தோசை மாவு பதத்திற்கு வந்ததும் சூடான தோசை கல்லில் மாவை ஊற்றி சுவையான ராகி தோசையை நீங்கள் செய்யலாம்.

இறுதியில் உங்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில், சீஸை துருவி தோசையின் மேல் தூவி பரிமாறலாம். இதற்கு புதினா, தேங்காய் சட்னி போன்றவற்றை சைடிஸ்ஸாக எடுத்து கொள்ளலாம்.

சிறுநீரகத்தின் செயல்திறனை அதிகரிக்கும் ஆரோக்கியமான 5 உணவுகள்!

இதோடு ராகி மாவில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்தும் தோசை ஊற்றலாம். இது உங்களது உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியை வழங்குகிறது. எனவே, ஆரோக்கியமான காலை உணவை ராகியுடன் ஆரம்பியுங்கள். இது சத்தானது மட்டுமில்லாமல் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களை நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவியாக உள்ளது. இனிவரும் காலங்களில் ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெறுவதற்கு காலை உணவை தயவு செய்து யாரும் ஸ்கிப் பண்ணாம சாப்பிட்டுங்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லை நீங்கள் செய்யும் வேலையையும் உங்களுக்கு நேர்த்தியாக செய்து முடிக்க துணையாக இருக்கும்

First published:

Tags: Dosa, Healthy Food, Ragi