முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காலை உணவுக்கு ராகி அடை : உங்களுக்கான எளிமையான ரெசிபி..!

காலை உணவுக்கு ராகி அடை : உங்களுக்கான எளிமையான ரெசிபி..!

ராகி அடை

ராகி அடை

நீங்களும் கேழ்வரகு பயன்படுத்த நினைத்தால் இந்த அடையை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கேழ்வரகு உடலுக்கு குளுர்ச்சி தரும் உணவு என்பதால் வெயில் காலத்தில் இது பிரதான உணவாக எடுத்துக்கொள்ளப்படும். குறிப்பாக கிராமங்களில் இந்த உணவுப் பழக்கம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் நீங்களும் கேழ்வரகு பயன்படுத்த நினைத்தால் இந்த அடையை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

ராகி மாவு - 2 கப்

வெங்காயம் - 3

துருவிய தேங்காய் - 1/2 கப்

பச்சை மிளகாய் - 3

கருவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - 1/4 கப்

உப்பு - தேவைக்கு ஏற்ப

எண்ணெய் - வாட்டி எடுப்பதற்கு ஏற்ப

தண்ணீர் - மாவு பிசைந்து கொள்வதற்கு ஏற்ப

செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாய். கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.

ராகி மாவை ஒரு பவுளில் எடுத்துக் கொண்டு அதில் நறுக்கிய பொருட்களை போட்டு நன்குக் கிளறிக் கொள்ளவும்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக நீர் ஊற்றி கெட்டியான பதத்திற்குப் பிசைந்து எடுத்துக் கொள்ளவும். மாவை, சப்பாத்திக்கு பிசைவதைக் காட்டிலும் கொஞ்சம் தளர்ந்தவாறு பிசைந்து கொள்ளவும்.

தற்போது பிசைந்த மாவை 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

அடுத்ததாக தோசைக் கல்லை அடுப்பில் நன்குக் காய வைத்து எண்ணெய் ஊற்றவும்.

ஓட்ஸ் வெச்சு இப்படியெல்லாம் கூட சமைக்கலாமா? ஈசியான 3 ரெசிபிகள் உங்களுக்காக..!

எலுமிச்சை அளவிற்கு மாவை எடுத்துக்கொள்ளவும். அதை வாழை இலையில் வைத்து தோசை போல் தட்ட வேண்டும். தட்டும்போது வெங்காயத் துண்டுகளை நன்கு அழுத்தியவாறு தட்டுங்கள்.

அடுப்பை சிறு தீயில் வைத்து அந்த தட்டையை தோசைக் கல்லில் போட்டு, இரண்டு புறமும் திருப்பி எடுக்கவும். வெந்துவிட்டதா என உறுதி செய்த பின் எடுத்துவிடவும்.

தற்போது ருசியான அடை ரெடி.

குறிப்பு :

இதற்கு எந்தவித சைட் டிஷ்ஷும் தேவையில்லை. அப்படியே சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் கார சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். இந்த அடையை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்ற முருங்க இலை, காரட், குடை மிளகாய் போன்றவற்றை பொடிசாக நறுக்கி போடலாம்.

First published:

Tags: Ragi