முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மட்டன், சிக்கன், மீன் என ஒரே மாதிரி சமையலா..! இதோ முயல் கறி கிரேவி செய்ய ரெசிபி...!

மட்டன், சிக்கன், மீன் என ஒரே மாதிரி சமையலா..! இதோ முயல் கறி கிரேவி செய்ய ரெசிபி...!

முயல் கறி கிரேவி

முயல் கறி கிரேவி

மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் முயல் கறியில் கொலஸ்ட்ராலானது மிகவும் குறைவாக உள்ளது. எனவே எடையை பராமரிக்க நினைப்போர் முயல் கறியை அச்சமின்றி சாப்பிடலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சில வீடுகளிலும் தென் மாவட்டங்களில் உள்ள சில இறைச்சி கடைகளிலும் இறைச்சிக்காக முயல், காடை, வாத்து என வளர்த்து வருகின்றனர். அப்படி இறைச்சிக்காக வளர்க்கப்படும் முயல் கறியை வாங்கி சமைத்தால் ருசியாக இருக்கும். வழக்கமாக மட்டன், சிக்கன், மீன் என எப்போதும் ஒரே மாதிரியே சாப்பிடும் நீங்கள் இந்த முயல் கறி கிரேவியை ட்ரை பண்ணி பாருங்கள். நல்ல வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். அப்புறம் விடுமுறை நாட்களில் மட்டன், சிக்கனை விட்டுவிட்டு முயலைதான் சாப்பிடுவீர்கள்... இந்த பதிவில் முயல் கிரேவியை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் :

முயல் கறி - 1 கி

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 1

ஏலக்காய் - 1

பச்சை மிளகாய் - 1

மிளகாய்த்தூள் - 1 மற்றும் 1/2 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன்

மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

கரம் மசாலா தூள் - கால் ஸ்பூன்

கருவேப்பிலை - 1 கொத்து

மல்லித்தழை - கொஞ்சம்

செய்முறை :

1. முதலில் முயல் கறியை நன்கு சுத்தம் செய்து ,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி அலசி விடவும் .

2. பின் குக்கரில் , எண்ணெய் விட்டு பட்டை ,கிராம்பு , ஏலக்காய் , சேர்த்து பின் வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது ,பச்சை மிளகாய் , கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

3. பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்/. இதனுடன் முயல் கறியும் சேர்த்து மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,மஞ்சள்தூள் , கரம் மசாலா தூள் , மிளகுத்தூள் , உப்பு சேர்த்து வதக்கவும்  .

4. பின் அதனுடன்  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து , 5 - 6 விசில் வரை வேகவிடவும் . இறுதியாக மல்லித்தழை சேர்க்கவும் .கறியின் தன்மையை பொறுத்து இதன் வேகும் நேரம் வேறுபடலாம் . அப்படி வேகவில்லை எனில் மேலும் சிறிது நேரம் வேகவைக்கவும் .

5. நன்கு வெந்தபின் தான் இதன் சுவை சிறப்பாக இருக்கும் . இல்லாவிடில் இதன் வாடை அப்படியே இருக்கும் .

6. கிரேவி ரெடியான பிறகு கடைசியில் மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய பூண்டை போட்டு கிளற வேண்டும். இது நல்ல வாசனையாக இருக்கும்.

First published:

Tags: Meat, Non Vegetarian